மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

ரேஷன் கார்டு e-KYC கைரேகை பதிவு சிறப்பு முகாம் (2026)

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள்  வெளியிடப்பட்ட இந்த மாவட்ட நிர்வாகத்தின் பத்திரிக்கை செய்தி, மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறும் பயனாளிகளுக்கான மின்னணு கைரேகைச் சரிபார்ப்பு (e-KYC) முறையை விரைவுபடுத்துவதற்கான ஒரு சிறப்பு முகாம் நடத்தப்படுவதை அறிவிக்கிறது (PDF 118 KB)

மேலும் பல

விநாயகர் சதுர்த்தி சிலைக் கரைப்பு வழிகாட்டுதல்கள் (2026)

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொறுப்புடன் கொண்டாடுவதற்காக, மத்திய மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியங்கள் விதித்துள்ள குறிப்பிட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகளை இது விவரிக்கிறது (PDF 10 KB)

மேலும் பல

மாவட்ட மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கரையாபாலையூர் ஊராட்சி, பாக்கம் கிராமம் மற்றும் வடகண்டம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மின்னணு பயிர் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 541 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும் ஊரக வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

“பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் முதல் இடைத்தேர்வு மதிப்பெண்களை அவர் பாடவாரியாக மீளாய்வு செய்து, தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கினார். மேலும், மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களை அடைவதற்கு வழிகாட்டி அவர்களை ஊக்குவித்தார்

மேலும் பல

நமது மாவட்ட மா மரங்கள் கவாத்து செய்வதற்கான வழிகாட்டுதல் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

இப்பகுதியில் சுமார் 642 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்வதற்கான அத்தியாவசிய அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார் (PDF 255 KB)

மேலும் பல

டான்ஃபினெட் பாரத்நெட் திட்டம்: நிபந்தனைகள் தளர்வு மற்றும் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணையம் வழங்க மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்கிறது. தமிழ்நாட்டில் இத்திட்டப் பணிகள் 96% நிறைவடைந்துள்ளன (PDF 366 KB)

மேலும் பல

மதுபானக் கடைகள் மூடல் உத்தரவு: ஆகஸ்ட் 26 உலர் நாள்

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026

தமிழ்நாடு அரசு இந்த தேதியை விற்பனை இல்லாத “உலர் நாளாக” (Dry Day) சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது           (PDF 12 KB)

மேலும் பல

2026 ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

உள்ளூர் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமர்ப்பிக்கும் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவர்களின் குறைகளுக்கும் கேள்விகளுக்கும் அதிகாரிகள் விளக்கமும் தீர்வும் அளிப்பார்கள் (PDF 256 KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான பள்ளி கலைத்திருவிழா போட்டிகள் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள் 2026 ஆகஸ்ட் 24 அன்று பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். (PDF 255 KB)

மேலும் பல

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது  (PDF 199 KB)    

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருவாரூர் வட்டம் மற்றும் நகரம், சுந்தரவிளாகம் வருவாய் கிராமம், மேட்டுப்பாளையம் தெருவில் நடைபெற்ற தீ விபத்தில் சேதமடைந்த ஆவணங்களுக்கு மாற்றாக புதிய ஆவணங்களான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பட்டா போன்ற ஆவணங்களை வருவாய்த்துறையின் சார்பில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரகள்  வழங்கினார் (PDF 109 KB)

மேலும் பல

வேலைவாய்ப்புத் துறை செய்தி :திருவாரூர் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

தொழில்துறை, சேவைத்துறை மற்றும் விற்பனைத்துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன (PDF 104 KB)

மேலும் பல

ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிக நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026

இந்தத் தற்காலிகப் பணி 03.04.2027 முதல் 25.06.2027 வரை (சுமார் இரண்டு மாதங்கள்) சவூதி அரேபியாவில் இருக்கும். இப்பணிக்காலம் அரசு ஊழியர்களின் வழக்கமான பணிக்காலமாகவே கருதப்படும் (Pdf 24 KB)

மேலும் பல

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச TNPSC குரூப்-2 / 2A பயிற்சி வகுப்புகள் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026 மற்றும் எழுத்துத்தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் (Pdf 109 KB)

மேலும் பல

மன்னார்குடியில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

மாவட்டஆட்சியர் அவர்கள் மன்னார்குடி வட்டத்தில் 19-08-2026 காலை 9:00 மணி முதல் 20-08-2026 காலை 9:00 மணி வரை 24 மணி நேர முகாம் அடிப்படையிலான கள ஆய்வை மேற்கொண்டார். மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களின் குறைகளுக்கு நேரடியாக உடனுக்குடன் தீர்வு காண்பதும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களை எவ்வித தடையுமின்றி சென்றடைவதை உறுதி செய்வதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். (PDF 107 KB)

மேலும் பல

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்: மன்னார்குடியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

மாவட்ட ஆட்சியர் அவர்கள், சவளக்காரன் கிராமத்தில் ₹45 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளையும், மன்னார்குடி தலைமை மருத்துவமனையில் ₹20 கோடி மதிப்பீட்டில் ஐந்து அடுக்குக் கட்டடப் பணியையும் மற்றும் ₹229 கோடி மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (pdf 14 KB)

மேலும் பல

மாவட்ட தேசிய அளவிலான புள்ளியியல் துறை கணக்கெடுப்பு பணிகள்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

தற்போது அதன் 81-வது சுற்றாக நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பு, நாட்டின் ஒட்டுமொத்த குடும்பங்களின் சொத்துரிமை, மூலதன உருவாக்கம் மற்றும் கடன் நிலவரங்கள் குறித்த முக்கியமான நிதித் தரவுகளைச் சேகரிக்கிறது (PDF 12 KB)

மேலும் பல

திருவாரூர் வருவாய்க் கோட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

திருவாரூர் வருவாய்க் கோட்டத்திற்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2026 ஆகஸ்ட் 20 அன்று மாலை 4:00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது (PDF 108 KB)

மேலும் பல

பௌத்தர்கள் நாக்பூர் பயணம் மேற்கொள்ள நிதியுதவித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  (PDF322 KB)

மேலும் பல

மாவட்ட தேசிய அளவிலான புள்ளியியல் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

2026 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரை நடைபெறவுள்ள இக்கணக்கெடுப்பு, எதிர்கால நிதிக் கொள்கைகளை வகுப்பதற்காக குடும்பங்களின் சொத்துக்கள், கடன் நிலை மற்றும் முதலீட்டு முறைகள் குறித்த முக்கியத் தரவுகளைச் சேகரிக்கிறது  (PDF 14 KB )

மேலும் பல