மூடு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

மாவட்ட சமூக நல அலுவலர்

மாவட்ட சமூக நல அலுவலகம்,
அறை எண் – 5 மாவட்ட ஆட்சியரகம்,
திருவாரூர் – 04366 – 224861
மின்னஞ்சல் முகவரி dswo[dot]tntvr[at]nic[dot]in

சமூக நலத்துறை மகளிர் சமுதாயத்தில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றிட செயல்பட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய சமூக உரிமை பெற்றிடவும் செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறையில் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் 4 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் உள்ளன. அவை ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக பயனாளிகளுக்கு 23.05.2016 முதல் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் கலவித்தகுதிக்கேற்ப திருமண நிதி பட்டம் / பட்டயப்படிப்பிற்கு ரூ.50,000/- மேல்நிலைக்கல்வி ரூ.25,000/-மும் வழங்கப்படுகிறது.

 

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – 2013 (POSH Act )ன் கீழ் மாவட்ட அளவிலான உள்ளூர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் விபரம்

View (PDF 296 KB )

 

சமூக நலத்துறை

இதர திருமண நிதி உதவி பெற தகுதிகள்
திட்டங்கள் தற்போது பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள்
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.
  • வயது
    திருமணத்தின்போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
  • சான்றுகள்
    சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு விதவைச்சன்று, வருமானச்சான்று தேவையில்லை. விதவை உதவி தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச்சான்று மற்றும் வருமானச்சான்று தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்.
  • திருமண நிதியுதவி பெறுவர்கள்
    மணப்பெண்ணின் தாயிடம் வழங்கலாம். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், மணமகளிடம் வழங்கலாம்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ,24,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு
    விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.
  • வயது
    திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
  • சான்றுகள்
    ஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும்.
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகளிடம் வழங்கலாம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்
  • இத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்.
  • வயது
    திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
  • சான்றுகள்
    1. திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று
    2. மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள்
    மணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்.
    திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.
    திட்டம்-2-ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/-மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.
டாக்ட்ர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம்
  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு திருமணமாகி ஆறு மாதத்திற்குள்.
  • வயது வரம்பு திருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20-ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்.
  • சான்றுகள்
    1. விதவைச் சான்று
    2. மறுமணச் சான்று
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள் மறுமணம் செய்யும் மணமகள்
  • நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
    திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.
    திட்டம்-2-ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/-மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.

 

 

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு
    திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணபிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்
  • குறைந்தபட்ச வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
  • சான்றுகள்
    ஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும்
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகளிடம் வழங்கலாம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்

  • இத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்
  • வயது
    திருமணத்தின் போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
  • சான்றுகள்
  • திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று
  • மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்
  • நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
    திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும். திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு (ரூ.50,000/-ம் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000/-. தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்
  • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம்
  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு திருமணமாகி ஆறு மாதத்திற்குள் இருத்தல் வேண்டும்
  • வயது வரம்பு
    திருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்
  • சான்று
  • விதவைச் சான்று
  • மறுமண பத்திரிக்கை
  • திருமண நிதியுதவி பெறுவபவர்கள் மறுமணம் செய்யும் மணமகள்
  • நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
    திட்டம் 1ல் ரூ.25,000 –மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்,
    திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 –மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

திட்டம் – 1

  • ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
    திட்டம் – 2
  • இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
    திட்டம் – 3
  • முதல் குழந்தை பேற்றின் போது ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது குழந்தைப் பேற்றின் போது, இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் சிறப்பினமாக கருதி, மூன்று பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000/- வீதம் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
    திட்டத்தின் நோக்கம்
    பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி (10ம் வகுப்பு) அளிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்

  • தாய் தந்தையரின் வயதுச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று)
  • பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்று
  • குடும்ப நல அறுவைசிகிச்சை சான்று (தாய் அல்லது தந்தை)
  • 10ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்து வருவதற்கான சான்று (வட்டாட்சயர்)
  • ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சயர்)
  • குடும்ப வருமான சான்று (வட்டாட்சயர்)
  • ஆண் குழந்தை தத்து எடுக்க மாட்டேன் என்பதற்கான சான்று (பெற்றோர்)
  • குடும்ப புகைப்படம்
  • குடும்ப அட்டை நகல்
  • ஆதார் நகல்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச

தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

  • இத்திட்டத்தில் பயன்பெற தகுதிகள்
  • வயது – 40க்குள் இருக்க வேண்டும்
  • விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.
    சான்றுகள்
  • பள்ளி மாற்றுச் சான்று
  • விதவைச் சான்று
  • கணவரால் கைவிடப்பட்டவர் சான்று
  • வருமானச் சான்று 72,000க்குள்
  • தையற் பயிற்சி சான்று (குறைந்தது 6 மாதம்)
  • ஆதார் நகல்