வேளாண்மைப் பொறியியல் துறை
திருவாரூர் மாவட்ட துறை தலைமை அலுவலர் செயற்பெறியாளர்,
வேளாண்மைப் பொறியியல் துறை,
அலுவலக முகவரி 2/104 மெயின் ரோடு, பவித்திரமாணிக்கம்,
மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் 610 104
தொலைபேசி எண் : 04366 241577
நிகரி எண் : 04366 241577
மின்னஞ்சல் முகவரி : aedeetvr@tn.nic.in, aedeetvr@gmail.com
தஞ்சாவூர் மண்டல துறை தலைமை அலுவலர் கண்காணிப்புப் பெறியாளர்,
வேளாண்மைப் பொறியியல் துறை,
அலுவலக முகவரி 87 ஏ 4 வது குறுக்குத் தெரு,
திரிபுர சுந்தரி நகர்,
தஞ்சாவூர் 613 007
தொலைபேசி எண் : 04362 235168
நிகரி எண் : 04362 235168
மின்னஞ்சல் முகவரி : aedsetnj@.nic.in, aedsetnj@gmail.com
தமிழ்நாடு மாநில துறை தலைமை அலுவலர் தலைமைப் பெறியாளர்,
வேளாண்மைப் பொறியியல் துறை,
அலுவலக முகவரி 487 அண்ணா சாலை,
நந்தனம்,
சென்னை 600 035,
தொலைபேசி எண் : 044 24352686, 044 24350154, 044 24352622
நிகரி எண் : 044 2434 8042
மின்னஞ்சல் முகவரி : aedce@tn.nic.in, aedcewrm@gmail.com
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை திருவாரூர் செயற்பொறியாளார் தலைமையில் திருவாரூர் மற்றும் மன்னார்குடியை தலைமையிடமாக கொண்டு இரண்டு உபகோட்டங்கள் மற்றும் திருவாரூரில் வேளாண்மைக் கருவிகள் பணிமனை செயல்பட்டு வருகிறது.
திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையைச் சார்ந்த வேளாண்மை இயந்திரங்களின் (நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சிறுபாசனத் திட்டக் கருவிகள் ) பழுது பணிகள மேற்கொள்ள உதவி செயற்பொறியாளர்(வே,பொ) தலைமையில் திருவாரூரில் வேளாண்மைக் கருவிகள் பணிமனை செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கீழ்க்கண்ட திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
1. நில மேம்பாட்டுத் திட்டம்
2. சிறு பாசனத் திட்டம்
3. வேளாண் கருவிகள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல்
4. பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
1. நில மேம்பாட்டுத் திட்டம்
விவசாயத்திற்கு பயன்படுத்த இயலாத மேடு பள்ளங்கள் நிறைந்த நிலங்களை இத்துறை மண் தள்ளும் இயந்திரங்கள் மூலம் சீர்திருத்தி விவசாய நிலங்களாக மாற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களை உழுதர் , லேசர் கருவி மூலம் நிலம் சமன் செய்தல், வேளாண் இடுபொருள், உரங்கள் போக்குவரத்து பணி மற்றும நீர் இறைக்கும் பணிக்கும் (உழுவையில் பம்ப்செட் பொருத்தி) குறைந்த வாடகையில் உழுவைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வேளாண்மை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 2 மண் தள்ளும் இயந்திரங்களும், 17 உழுவைகளும், 10 ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களும் 2 நடவு இயந்திரங்களும் உள்ளது,
2. சிறுபாசனத் திட்டம்
இத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் சிறுபாசனத் திட்டக் கருவிகள் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர் வளத்தை பெருக்கி பாசன பரப்பை அதிகரித்து விளைச்சலை பெருக்கி வேளாண்மை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 8 விசைத்துளைக் கருவிகளும் , 2 சிறு விசைத்துளைக் கருவிகளும் உள்ளது.
1.வேளாண்மை இயந்திரங்களுக்கான வாடகை விபரங்கள்
வரிசை எண் | இயந்திரம் | மணிக்கு வாடகை(எரி பொருளுடன்) | இருப்பில் உள்ள இயந்திரங்கள் எண்ணிக்கை |
---|---|---|---|
01 | உழுவை இயந்திரம்(டிராக்டர்கள்) | ரூ, 340 ./ | 17 எண்கள் |
02 | மண்தள்ளும் இயந்திரம் (புல்டோசர்கள்) | ரூ, 840 ./ | 2 எண்கள் |
03 | அறுவடை இயந்திரம் (டயர் டைப்) | ரூ, 875 ./ | 5 எண்கள் |
04 | அறுவடை இயந்திரம் (செயின் டைப்) | ரூ, 1415 ./ | 5 எண்கள் |
2. சிறுபாசன திட்ட கருவிகளுக்கான வாடகை விபரங்கள்
வரிசை எண் | இயந்திரம் | ஆழ்க்குழாய் கிணறு விட்டம் | மீட்டருக்கு வாடகை | இருப்பில் உள்ள இயந்திரங்கள் எண்ணிக்கை |
---|---|---|---|---|
1 | விசைத்துளைக் கருவி | 6 அங்குல விட்டம் | ரூ, 120 ./ | 8 எண்கள் |
2 | விசைத்துளைக் கருவி | 8 அங்குல விட்டம் | ரூ, 130 ./ | |
3 | சிறு விசைத்துளைக் கருவி | 6 அங்குல விட்டம் | ரூ, 60./ | 2 எண்கள் |
4 | சிறு விசைத்துளைக் கருவி | 8 அங்குல விட்டம் | ரூ, 80 ./ |
3. அரசு மானியத்துடன் வேளாண்மைக் கருவிகள் வழங்குதல்
வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டங்கள் மூலம் உழுவைகள் , பவர் டில்லர், நடவு இயந்திரம், கதிர் அடிக்கும் இயந்திரம், கைளயெடுக்கும் கருவி, சுழல் கலப்பைகள், நிலம் சமன்படுத்தும் கருவிகள், தெளிப்பான்கள் மற்றும் இதர கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது, சிறு/குறு, பெண் விவசாயிகள் மற்றும் ஆதி திராவிட விசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும் மானியமாக வழங்கப்படு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017..18 ஆம் நிதியாண்டில் ரூ.114.720 இலட்சம் அரசு மானித்தில் வேளாண்மை இயந்திரங்கள் , கருவிகள் வழங்கப்பட்டுள்ளது, 34 வேளாண் வாடகை மையங்கள் ரூ.340 இலடச்ம் அரசு மானியத்துடன் தனி நபர்(தொழில் முனைவோர்) மற்றும் விவசாயிகள் குழுவிற்கு அந்தந்த வட்டார விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 59 வேளாண் வாடகை மையங்கள் ரூ.590 இலடச்ம் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
4. உலக வங்கி உதவியுடன் வேளாண்மை நவீன மயமாக்கல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்டம்
இத்திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நீர்வளமுள்ள ஆற்றுப் படுகைகளில் நீர்வள ஆதாரங்கள் சேமிக்க் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் நடப்பு நிதியாண்டில் 15 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
5. பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்
மழை நீரை சேகரித்து தேவையான நேரத்தில் பயிருக்கு பாய்ச்சி பயிரை காக்கும் வகையிலும் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசத் திட்டம் மூலம் 2200 பண்ணைக்குட்டைகள் அமைத்திட பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது.
- உழவு பணிகள் 4000 ஹெக்டேர் பரப்பில் ஹெக்டேருக்கு ரூ.1250 வீதம் ரூ.50.00
இலட்சம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது, - நுழைவு முகப்பு பணிகள் மூலம் 4 கிராமக் குளங்கள் ரூ.20.00 இலட்சம் செலவில்
அமைக்கப்பட்டுள்ளது. - மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 26 பண்ணைக் குட்டைகள் ரூ.35.00 இலட்சம்
செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, - மதிப்பு கூட்டு இயந்திரங்கள ரூ.10.00 இலட்சம் அரசு மானியத்துடன் நிறுவ
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
6. நீடித்த நிலையான மானாவாரி இயக்கம்
7. சோலார் மின் மோட்டார்கள் அமைக்கும் திட்டம் (தேசிய வேளாண்மை
அபிவிருத்தி திட்டம்)
இத்திட்டத்தின் கீழ் இலவச மின்சாரத்தை துறப்பு செய்ய மற்றும் இலவச மின்சார இணைப்பு வேண்டி அளித்துள்ள விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு சோலார் மின்மோட்டார்கள் 90 சதவீத மானியத்தில் அமைத்துத் தர திட்டமிடப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் 30 சோலார் மின்மோட்டார்கள் அமைக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8. சோலார் உலர்த்தி அமைக்கும் திட்டம் (அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம்)
(தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்)
இத்திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலடச்ம அரசு மானியத்துடன சோலார் உலர்த்திகள அமைக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
9. கட்டுமானப் பணிகள்
மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட அலுவலகத்தில் ரூ.75.00 இலட்சம் செலவில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சகோதரத் துறைகளில் கட்டுமானப் பணிகள் மற்றும் மாநில அரசு விதைப்பண்ணைகளில் மேம்பாட்டுப் பணிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் வட்டாரங்களில் தலா ரூ.150.00 இலட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் வட்டாரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நன்னிலம் வட்டாரத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூரில் ரூ.60.00 இலட்சம் செலவில் உரக் கட்டுப்பாட்டு மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கொருக்கை கால்நடை மேம்பாட்டுப் பண்ணையில் ரூ.50.00 இலட்சம் செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய தோட்டக்கலை பண்ணை மன்னார்குடி வட்டம் மூவாநல்லூரில் ரூ.172.00 இலட்சம் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடுவூர் தென்னை நாற்றங்கால் பண்ணையில் ரூ.17.50 இலட்சம் செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாநில அரசு விதைப்பண்ணைகளில் ரூ.264.50 இலட்சம் செலவில் விதைப்பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.