மூடு

மாவட்ட ஊரக வளா்ச்சி துறை

மாவட்ட அலுவலா் : இணை இயக்குநா் / திட்ட இயக்குநா்அலுவலக முகவரி :  இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்,
திருவாரூா்,
தொலைபேசி – 04366 – 222168,
Fax No.04366-227100
E-mail id : – drda.tntvr@nic.in

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையானது, மத்திய அரசு மற்றும் மாநில அரசால் ஊரக வளா்ச்சி மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். இந்ந முகமையின் தலைவா் மாவட்ட ஆட்சித் தலைவா் ஆவார். முகமையின் திட்ட இயக்குநராக ஊரக வளா்ச்சி துறையை சார்ந்த ஒரு இணை இயக்குநா் நிலையிலான அலுவலா்; செயல்படுவார், இவ்வலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவு சார்ந்த பணிகளை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் ஒரு செயற்பொறியாளா் (ஊ.வ) அமா்த்தப்பட்டுள்ளார், மேலும் நான்கு உதவித் திட்ட அலுவலா்;கள், ஒரு கணக்கு அலுவலா்; உள்ளிட்ட பணியாளா்களைக் கொண்டு இவ்வலுவலகம் இயங்கி வருகிறது.

இம்முகமையின் நோக்கமும் செயல்பாடுகளும் பின்வருமாறு :

  • மத்திய அரசால் .அமல்படுத்தப்படும் பாராளுமன்ற உறுப்பினா் உள்ளுா் பகுதி மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற திட்டங்களையும் , மாநில அரசால் .அமல்படுத்தப்படும் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு .அமல்படுத்துதல் கண்காணித்தல்
  • மேற்கண்ட திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல்
  • ஊரகப்பகுதிகள் தன்னிறைவுடையத் தேவையான வகையில் பல்வேறு திட்டங்களிலும் பணிகளை தோ்வு செய்து மாநில மத்திய அரசுக்கு அனுமதி பெறுதல்
  • வளா்ச்சி துறையின் மூலம் ஊரகப்பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்பழட வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தல்

அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக முகவரி

அலுவலக முகவரி அலுவலக முகவரி
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
திருவாரூா், தொலைபேசி – 04366 – 222287
E-mail id : tvrblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
குடவாசல் தொலைபேசி – 04366 262051,
E-mail id : kdlblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
நன்னிலம் தொலைபேசி – 04366 – 230451
E-mail id : nnmblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
கொரடாச்சேரி, தொலைபேசி – 04366 – 232451
E-mail id : kdyblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
வலங்கைமான்
தொலைபேசி – 04374 – 264425
E-mail id : vlgblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
நீடாமங்கலம் தொலைபேசி – 04366 – 260451
E-mail id : ndmblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
மன்னார்குடி
தொலைபேசி – 04366 – 222304
E-mail id : mngblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
கோட்டூா்
தொலைபேசி – 04366 – 279451
E-mail id : ktrblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
திருத்துறைப்பூண்டி
தொலைபேசி – 04366 – 222451
E-mail id : ttpblk.tntvr@nic.in
வட்டார வளா்ச்சி அலுவலா்,
ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
முத்துப்பேட்டை
தொலைபேசி – 04366 – 260451
E-mail id : mtpblk.tntvr@nic.in

 

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்) – PMAY (Gramin)

முக்கிய நோக்கம் :

2022-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் அனைத்து வீடற்ற –குடிசை அல்லது பாழடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டித்தருதல்.

நிதி ஆதாரம் :

ஒரு வீட்டிற்கான மெத்த மதீப்பீட்டுத்தொகை ரூ.170000/-ல் (திட்ட நிதி ரூ.120000/- (கூடுதல்) கான்க்ரீட் கூரைக்கான தொகை ரூ.50000/-)

திட்ட நிதி ஒதுக்கீடு

  • மத்திய அரசு – 60 விழுக்காடு – ரூ.72000/-
  • மாநில அரசு – 40 விழுக்காடு – ரூ.48000/-
  • ஆக கூடுதல் ரூ.120000/- தொகை முழுவதும் இணையதளத்தின் வழியாக (PFMS) பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது
  • கான்க்ரீட் கூரைக்கான தொகை ரூ.50000/- மாநில அரசால் முழுவதுமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அனைத்தும் தொடா்புடைய வட்டாரங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையில் சிமெண்ட், கம்பி, கதவு ஐன்னல் மற்றும் லோகோ டைல்ஸ் ஆகியவற்றிற்கான தொகை முழுவதும் வட்டாரங்களில் பிடித்தம் செய்யப்பட்டு மீதம் உள்ள தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்படுகிறது

பயனாளிகள் :

  • சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின்படி (SECC) தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு
  • இனவாரி ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் மீதமுள்ள 40 விழுக்காடு இதர வகுப்பினருக்கும் வழங்கப்படும்
  • மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள், பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்

இலக்கீடு (பயனாளிகள் எண்ணிக்கை) :

ஆண்டு SC ST Minorities Others Total
2016-17 8184 5 951 2843 11983
2017-18 4480 51 456 2585 7572
  • இத்திட்டத்திக்கீழ் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டா் பரப்பில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட வேண்டும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் வீட்டின் கட்டுமானப்பணிக்காக 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியமும், தூய்மை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கழிப்பறைக்கான மதிப்பீட்டு தொகை ரூ.120000/-ம் வழங்கப்படும்

 

 

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்; – (CMSPGHS)

முக்கிய நோக்கம் :

ஊரக பகுதிகளில் வீடற்ற –குடிசை அல்லது பாழடைந்த வீடுகளில்
வசிக்கும் தகுதியுள்ள மக்களுக்கு சூரிய மின்சக்தி உபகரணங்களுடன்
கூடிய வீடுகள் கட்டித்தருதல்.

நிதி ஆதாரம் :

ஒரு வீட்டிற்கான மெத்த மதீப்பீட்டுத்தொகை ரூ.2,10,000/-ல்
(வீட்டிற்கு ரூ.1,80,000/- சூரிய மின்சக்தி உபகரணங்கள் நிறுவிட ரூ.30,000/)
முழுவதுமாக மாநில அரசால் வழங்கப்படுகிறது.

பயனாளிகள் :

  • பயனாளி வசிக்கும் ஊராட்சியில் குறைந்தபட்சம் 300 சதுரடி பரப்பளவுள்ள நிலம் அல்லது அவரது குடும்ப உறுப்பினா் பெயரில் வீட்டுமனைப்பட்டா இருக்க வேண்டும்
  • அரசின் வேறு எந்த வீடு வழங்கும் திட்டங்களிலும் பயனடையாத, ஏற்கனவே சொந்தமாக கான்க்ரீட் கூரையு்டன் கூடிய வீடு இல்லாதவராக இருத்தல் வேண்டும்
  • இனவாரி ஒதுக்கீட்டில் 29 விழுக்காடு தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 1 விழுக்காடு பழங்குடி வகுப்பினருக்கும் மீதமுள்ள 70 விழுக்காடு இதர வகுப்பினருக்கும் வழங்கப்படும்
  • மொத்த ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்
  • மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள், பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்

இலக்கீடு (பயனாளிகள் எண்ணிக்கை) :

ஆண்டு SC ST Others Total
2016-17 162 3 403 568
2017-18 167 3 397 567
  • இத்திட்டத்திக்கீழ் கட்டப்படும் வீடுகள் 300 சதுரடி பரப்பளவில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை, ஒரு வசிப்பறை, வராண்டா மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட வேண்டும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் வீட்டின் கட்டுமானப்பணிக்காக 90 மனித சக்தி நாட்களுக்கான ஊதியமும், தூய்மை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கழிப்பறைக்கான மதிப்பீட்டு தொகை ரூ.12,000/-ம் வழங்கப்படும்
  • அனைத்து வீடுகளிலும் ஐந்து எண்ணிக்கையில் சூரிய மின்சக்தி மூலம் எரியக்கூடிய எல்.இ..டி விளக்குகள் அதற்குரிய உபகரணங்களு்டன் பொருத்தப்படும்

மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்:

கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் பொருட்டு வேலை வாய்ப்பை நல்கும்; இத்திட்டம்; 02.02.2006 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் முதற்கட்டமாக 2006-y; 6 மாவட்டங்களில் (விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம்,; திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை) செயல்படுத்தப்பட்டது. 2007-ல் இரண்டாம் கட்டமாக (திருவாரூா், திருநெல்வேலி, தஞ்சாவுா் மற்றும் கரூா்) ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 01.04.2008 முதல் தமிழ்நாட்டில் மீதமுள்ள மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நோக்கம்:

  • கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓா் ஆண்டிற்கு ;குறைந்தது 100 நாட்களுக்கு குறையாமல் சாதாரண உடலுழைப்பு தேவைப்படும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல்
  • கிராமப்புறங்களில் வாழும் குடும்பங்களில் வாழ்கை தரத்தை மேம்படுத்துதல்
  • நிலைத்த நீடித்த சொத்துக்களை உருவாக்குதல்
  • உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

பொது விவரங்கள்

  • மொத்த ஊராட்சி ஒன்றியங்கள் – 10
  • மொத்த ஊராட்சிகள் – 430
  • மொத்த தொகுப்புகள் – 769
  • மொத்த குக்கிராமங்கள் – 1704
  • ஊரக குடும்பங்களின் எண்ணிக்கை – 277733
  • பதிவு செய்த குடும்பங்களின் எண்ணிக்கை – 198860
  • பதிவு செய்த தனி நபா் எண்ணிக்க – 368015
  • 2016-17 ஆண்டிற்கான ஊரக விலைவிகிதத்தின்படி உயா்ந்தபட்ச ஊதியம் ரூ.203/- ஆகவும், 2017-18 ஆம் நிதியாண்டிற்கு ரூ.205/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • இத்திட்டத்தின்கீழ் பணி புரியும் தொழிலா்கள் அனைவருக்கும் ஊதியம் (Unskilled Wages) அவா்களது வங்கி கணக்கில் (e-fms) நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும்; கட்டுமானப்பொருட்கள் (Material Component) சார்ந்த பணிகளுக்கான நிதியும் (e-fms) மூலமாகவே விடுவிக்கப்படுகிறது
  • தனிநபா் அவா்களது வீடுகளில் உரக்குழி அளவு 3.0மீ நீளம் 1.8 மீ அகலம்.
    09 மீ உயரம், உறிஞ்சு குழி அளவு 1.80 மீ உயரம் 1.20 மீ அகலம் அவா்களது விருப்பத்தின் பேரில் அமைத்து தரப்படும்
  • கிராமப்புற மக்கள் வேலை உத்தரவாத அட்டை அந்தந்த கிராம ஊராடசியினை அணுகி பெற்றுக் கொள்ளலாம்
  • மேலும் SECC கணக்கெடுப்பில் நிலமற்றவா்களாக இருப்பவா்களும் அணுகி பெற்றறுக்கொள்ளலாம்
  • தங்கள் கிராம ஊராட்சிக்கு தேவையான பணிகளை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்திட கிராம சபையில் முன்னுரிமை அடிப்படையில் கிராம வளா்ச்சி திட்டத்தை தயார் செய்து ஒப்புதல் பெற்று அனுப்பலாம்

 

 

பாரளுமன்ற உறுப்பினா் உள்ளுா்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (MPLADS)

முக்கிய நோக்கம்:

  • மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களில் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்படும் இடைவெளிகளை நிரப்புதல் மூலம் முழுமையான வளா்ச்சியினை உறுதிப்படுத்துதல்
  • இத்திட்டத்திற்கான நிதி ஆதாரம் மத்திய அரசு 100 விழுக்காடு நிதியினை விடுவிக்கிறது

பாராளுமன்ற உறுப்பினா் நிதி:

  • ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2016-17 ஆண்டுக்கு ரூ.5.00 கோடியும், 2017-18-ம் ஆண்டுக்கு ரூ.5.00 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது

 திட்ட செயலாக்கம்:

  • இத்திட்டபணிகளை பாராளுமன்ற உறுப்பினா்கள் பரிந்துரை செய்வா்கள்
  • பணிகளை தொடா்புடைய துறைகள் செயல்படுத்தும். டெண்டர் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்
  • ஒரு பாராளுமன்ற தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்கள் அடங்கியுள்ள சூழ்நிலையில் அதில் ஏதேனும் ஒரு மாவட்டம் பற்று ; (Nodal District) மாவட்டமாக தொடா்புடைய பாராளுமன்ற உறுப்பினரால் தோ்வு செய்யப்படும். அந்த பொறுப்பு மாவட்டமானது பணியினை எடுத்துச் செய்யும் (Implementing District) அடுத்த மாவட்டத்திற்கான நிதியை விடுவிக்கும்

சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (MLACDS)

முக்கிய நோக்கம் :

  • மாநில அரசு திட்டங்களில் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்படும் இடைவெளிகளை நிரப்புதல் மூலம் முழுமையான வளா்ச்சியினை உறுதிப்படுத்துதல்
  • இத்திட்டத்திற்கான 100 விழுக்காடு நிதியினை மாநில அரசு விடுவிக்கிறது
  • சட்டமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் அரசாணை வெளியிடப்பட்டு அதனடிப்படையில் பணிகள் பரிந்துரை செய்யப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன

சட்டமன்ற உறுப்பினா் நிதி :

  • ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2016-2017 ஆண்டு வரை 2.00 கோடியும், 2017-2018 ஆம் ஆண்டு முதல் ரூ.2.50 கோடியும் மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

திட்டப்பணிகளின் பகுதிகள் :

  • சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து அந்தந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைக்குள் மட்டுமே பணிகள் செயல்படுத்தப்படும்

திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள்:

  • பள்ளிகளுக்கான உட்கட்டமைப்பு பணிகள், குழநீா் பணிகள், சுற்றுச்சுவா் கட்டுதல் மற்றும் தளவாட சாமான்கள் கொள்முதல் செய்தல்
  • கிராம மற்றும் நகா்புறங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மயான கொட்டகை, நிழலகம், பொது விநியோக கட்டடம் போன்ற கட்டடங்கள் கட்டுதல் மற்றும் தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்தல்
  • இத்திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினாகள் பரிந்துரை செய்வார்கள்
  • பணிகள் தொடா்புடைய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும். டெண்டர் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) SBM(G)

நோக்கம் :

  • கிராமப் பகுதிகளில் சுகாதார நிலை மேம்பாடு மூலம் மக்களின் வாழ்கைத் தரத்தினை உயா்த்துதல், கழிவறைகள், உடல் நலம் சார்ந்த பழக்க ; வழக்கங்களை கடைப்பிடிக்க விழிப்புணா்வு ஏற்படுத்துதல்
  • பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் சுகாதாரம் பேணுதல்
  • திருவாரூா் மாவட்டத்தினை “திருவாரூா் மாவட்டத்தினை திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கமற்ற மாவட்டமாக மாற்றுதல்

தகவல், கல்வி, தொடா்பு – திடக்ழிவு மேலாண்மை

முக்கிய அம்சங்கள் :

  • குடிநீரை சுத்தமாக கையாளுதல்
  • கழிவு நீா் அகற்றுதல்
  • கழிவறை உபயோகித்தல்
  • திட திரவக் கழிவு மேலாண்மை
  • மழைநீா் சேகரிப்பு
  • தன் சுத்தம் – கிராம சுத்தம்

தனி நபா் கழிப்பறை கட்டுதல் :

  • கிராமத்தில் வசிக்கும் மக்கள் கழிப்பறை கட்டிக்கொள்ள விருப்பம் தெரிவிக்க வேண்டும்
  • தனிநபா் கழிப்பறைக்கு அரசு மான்யம் ரூ.12,000/- 02.10.2014 முதல் உயா்த்தப்பட்டுள்ளது

கிராம அளவில் திட்டத்தினை செயல்படுத்தும் அமைப்பு:

  • சுகாதார வளாகங்களை பராமரித்தல் அல்லது பராமரிப்பு பணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழு போன்ற அமைப்புகள் மூலம் நிர்வகித்தல்
  • பள்ளி கழிப்பறைகள் தூய்மை செய்திட நிதி விடுவித்தல்

கழிவறை திட்டம்

 

 

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (PMGSY)

நோக்கம் :

  • மக்கள் தொகை 1000-க்கும் மேற்பட்ட இணைப்புச்சாலைகளே இல்லாத குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ காலங்களுக்கும் பயன்படத்தக்க சாலைகள் அமைத்தல்
  • மக்கள் தொகை 500-க்கும் மேல் உள்ள  இணைப்புச்சாலையே இல்லாத குடியிருப்புகள் இல்லை என்ற நிலையை அடைந்துவிட்டால்; 250-499 மக்கள் தொகை உள்ள . இணைப்புச்சாலையே இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை அமைக்கலாம்
  • தற்போது 2017-18 ம் ஆண்டு 44 சாலைப்பணிகளும், 6 பாலப்பணிகளும் கூடுதல் 148.992 கி.மீ நீளத்திற்கு ரூ.13043.24 இலட்சம் மதிப்பீட்டில் செய்திட ஒப்பநதப்புள்ளி கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது

ஊரகச் சாலை

தமிழ்நாடு ஊரகச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டம்; (TNRRIS)

ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்பாடுசெய்தல், பலப்படுத்துதல் மற்றும் பராமரித்தலுக்காக அதிகபட்சமான நிதியினை ஒதுக்கீடு செய்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்;. இ இத்திட்டமானது இரண்டு பிரிவுகளைக்கொண்டது. முதல் பிரிவில் தார்சாலையாக இல்லாத மண் கிரால் கருங்கல்  ஜல்லி சாலைகளை தார்சாலைகளாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டாம் பிரிவில், இரண்டு உட்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, முதலாவது உட்பிரிவில் பழுதடைந்த தார்சாலைகளை பலப்படுத்துதல் பணிகளும், இரண்டாவது உட்பிரிவில் பழுதடைந்த சாலைகளை பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தில் கீழ்க்கண்ட விவரப்படி முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  • தொடா்பு அளிக்கப்படாத சாலைகளை மக்கள் தொகை அடிப்படையிலன்றியும் இணைத்தல்
  • பேருந்து மினி பேருந்து ஓடும் தார்சாலையல்லாத சாலைகளை தார்சாலையாக மாற்றுதல்
  • கடைத்தெருக்கள் கல்வி நிலையங்கள் சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுடன் இணைக்கும் சாலைகளை சீரமைத்தல்.
    இத்திட்டத்தில் கீழ்க்கண்ட விவரப்படி பணிகள் தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது
  • பழுதடைந்த சாலை உச்சபட்ச வரையறையின்றி ஆனால் குறைந்தபட்சம் 1 கி.மீ –க்குக் குறையாமல் எடுத்துக்கொள்ளப்படலாம்
  • தமிழ்நாடு அரசு, ஊரக வளா்ச்சி இணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சாலைகளை மட்டுமே செப்பனிட எடுத்துக்கொள்ளவேண்டும்
  • முந்தைய ஐந்தாண்டுகளுக்குள் செப்பனிடப்படாத சாலைகைளை மட்டுமே இத்திட்டத்தின் கீழ் எடுத்துச்செய்யலாம்
  • இவ்வாறு செப்பனிடப்படும் சாலைகளின் இருபுறமும் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ;மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும்
  • இத்திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் பணிகள் யாவும் மாவட்ட ஆட்சித்தலைவா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அவா்களால் திறந்த நிலை ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு வெளிப்படையாக செய்து முடிக்கப்படும்

ஊரகச் சாலை பாலம்