மூடு

நெடுஞ்சாலை துறை

அலுவலகத்தின் பெயர்             – கோட்டப் பொறியாளர் அலுவலகம்,
நெடுஞ்சாலைத்துறை,
கட்டுமானம் (ம) பராமரிப்பு,
திருவாரூர்.
அலுவலகத் தலைவர்               – கோட்டப் பொறியாளர்,
திருவாரூர்.
தொடங்கப்பட்ட ஆண்டு            – 1997

தோற்றம்

1997 ஆம் ஆண்டு நாகப்பட்டிணம், நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம்
மற்றும் பராமரிப்பு கோட்டத்திலிருந்து திருவாரூர், நெடுஞ்சாலைத்துறை,
கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது.

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
tndehtiruvarur@gmail/com

செயல்பாடுகள்

இக்கோட்ட பராமரிப்பில் உள்ள சாலைகள்

  1. மாநில சாலைகள் (328.040 கி.மீ
  2. மாவட்ட முக்கிய சாலைகள் (230.050 கி.மீ)
  3. மாவட்ட இதர சாலைகள் (653.070 கி.மீ)
  4. கரும்பு அபிவிருத்தி சாலைகள் (39.367 கி.மீ)

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1250.527 கி.மீ சாலைகள் இக்கோட்டத்தின் மூலம் பராமரிப்படுகிறது. அவ்வபோது மேற்கண்ட சாலைகளில் ஏற்படும் குழி பள்ளங்களை சரி செய்வதற்கு இத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு பெற்று இத்துறையில் உள்ள சாலைப்பணியாளர்களின் வாயிலாக சாலை ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தார் நொடிகள் போடப்பட்டு சாலைகள் சீர் செய்யப்பட்டு வருகிறது.

இக்கோட்ட கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை மேம்பாடு மற்றும் அகலப்படுத்தும் பணிகள் 5 வருடத்திற்கு ஒருமுறை திட்டப்பணிகள் மூலமும், 3 வருடத்திற்கு ஒருமுறை திட்டம் சாராப் பணிகள் மூலமும் இத்துறையில் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெறுகின்றது.

இப்பணிகளின் மதீப்பீட்டிற்கு தொழில் நுட்ப அங்கீகாரம் கீழ்கண்டவாறு வழங்க்கப்படுகிறது.

  1. மதிப்பீடு ரூ. 50 இலட்சம் வரை கோட்டப் பொறியாளர் அவர்களால் ஒப்புதல்
    அளிக்கப்பட்டு ரூ.15 இலட்சத்திற்கு ஒப்பந்தம் செயலாக்கம் செய்யப்படுகிறது.
  2. மதிப்பீடு ரூ.50 முதல் 2 கோடி வரை கண்காணிப்புப் பொறியாளர் அவர்களால்
    ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
  3. மதிப்பீடு ரூ. 2 கோடிக்கு மேல் தலைமைப் பொறியாளர் (நெ) க (ம) ப, அவர்களால்
    ஒப்புதல் அளிக்கப்படுகிறது.