மூடு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

திருவாரூர் மாவட்டத்தில் 90 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாராமாகக்கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 328869 ஹெக்டேரில் 322859 ஹெக்டேரை சாகுபடி பரப்பாகக்கொண்டுள்ளது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும்.மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, அரசின் கொள்கைகளும்,நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன.இதன்மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.

விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும்,மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும், தேவையான,அரசின் கொள்கைகளும், நோக்கங்களும் வகுக்கப்படுகின்றன.இதன்மூலம் விவசாயம் சார்ந்த தொழிலகங்களின் மூலப்பொருள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன்,ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.

இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால்.வேளாண் உற்பத்தியில் திருவாரூர் மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது.விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர்கொள்கிறது.விவசாயிகளுக்கு நல்ல வருவாயும்.விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த,ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பரவலாக்கல் தொழில்நுட்பங்களுடன், கூடுதலாக தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA) பயனற்ற நில மேலாண்மை திட்டம்,நீடித்த வறட்சி நில வேளாண்மை,கூட்டு பண்ணையம்,விரிவான நீர் வடி நிலப்பகுதி வளர்ச்சி செயல்பாடுகள், நுண்நீர்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள்.

உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை,ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் (INM) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை(IPM)  போன்ற தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்:

அரசு விதைப்பண்ணை –

தீவாம்பாள்பட்டினம்,நெடும்பலம்,கீராந்தி,காஞ்சிகுடிகாடு,மூங்கில்குடி:

கருவிதைகள் மற்றும் ஆதார விதைகளைக்கொண்டு விதைப்பண்ணை அமைத்து விதை பெருக்கம் செய்து,வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்து,விவசாயிகள் நிலங்களில் விதைப்பண்ணை அமைத்து சான்று விதைகளை பெருக்கம் செய்து,மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தரமான சான்று பெற்ற விதைகளை விநியோகம் செய்வதே மாநில விதைப்பண்ணைகளின் நோக்கமாகும். நெல், உளுந்து, பச்சைப்பயறு, எள், நிலக்கடலை மற்றும் துவரை ஆகிய பயிர்களுக்கான விதை பண்ணைகள் அரசு விதைபண்ணைகளில் அமைக்கப்படுகிறது.

அரசு தென்னை நாற்றங்கால் : வடுவூர்தென்பாதி:

திருவாரூர் மாவட்டத்தைச்சார்ந்த விவசாயிகளுக்கு தேவையான தரமான குட்டை மற்றும் நெட்டை தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்குவதே தென்னை நாற்று பண்ணையின் நோக்கமாகும்.

உயிர் உரங்கள் உற்பத்தி மையம் – நீடாமங்கலம்:

அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர), ரைசோபியம் (பயறுவகைகள்), ரைசோபியம்(நிலக்கடலை) மற்றும் பாஸ்போ-பேக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் திட மற்றும் திரவ நிலைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி, இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை குறைத்து மண்வளத்தை மேம்படுத்துவதே உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தின் நோக்கமாகும்.

உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் : திருவாரூர்

தரமான உரங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கலப்பு உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் உர விற்பனை மையங்களில் இருந்து உர மாதிரிகள் எடுத்து உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமற்ற உரங்கள் விவசாயிகளை சென்றடைவது தடுக்கப்பட்டு விவசாயிகளின் நலனுக்கு ஏதுவாகிறது.

மண்பரிசோதனை நிலையம் – திருவாரூர்:

வலை சட்ட முறையில் மண்மாதிரிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டு மண்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஆய்வின் முடிவறிக்கையின்படி மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு.,மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவின்படி பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதனால் மண்ணின் தன்மை பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்கள் பயன்பாடு குறைந்து உற்பத்தி செலவினமும் குறைகிறது.

நடமாடும் மண்பரிசோதனை நிலையம் – திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 10 வட்டாரங்களிலும் ஊர்திகள் மூலம் விவசாயிகளின் கோரிக்கையின்படி கிராமங்களை சென்றடைந்து மண்ணின் தன்மைகளை ஊர்தியில் உள்ள கருவிகள் மூலம் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கி முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை – திருவாரூர் (அட்மா):

ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் விவசாயிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியினை குறைத்து ஒரு பாலமாக செயல்பட்டு தொழில் நுட்பங்களை செயல் விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் கண்டுணர் சுற்றுலா மூலம் விவசாயிகளுக்கு எடுத்து செல்வதே இதன் நோக்கமாகும்.

திட்டங்கள்:

தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்து சென்று வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் கீழ்க்காணும் விபரப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சார்பு திட்டங்கள்:

 • தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் (NADP) நெல்,பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பசுந்தாள் உரம் மூலம் மண்வளத்தை மேம்படுத்துதல்.
 • தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய் பனை இயக்கம் (NMOOP)– எண்ணெய் வித்துக்கள்,எண்ணெய்வித்து மரப்பயிர்கள்
 • தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்கள் (NFSM) – நெல் மற்றும் பயறு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் வணிக பயிர்களுக்கு மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 • தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் (NMSA) – ஒருங்கிணைந்த பண்ணையம் .
 • தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்.
 • விதை கிராம திட்டம் – நெல்,சிறுதானியங்கள்,பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் சான்று விதை விநியோகம் .
 • பாரம்பரிய வேளாண்மை சாகுபடி திட்டம் (PKVY).
 • பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY).

மாநில அரசு சார்பு திட்டங்கள்:

 • தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் (TCCM).
 • நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கம் (MSDA) – மானாவாரி சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி.
 • கூட்டுப் பண்ணையம் – உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல்.
 • விதை பெருக்கு திட்டம் – தமிழ்நாடு விதை மேலாண்மை முகமை. (TANSEDA).

படிநிலையின் அமைப்பு:

மாவட்ட அளவிலான அலுவலகம்:

வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், திருவாரூர், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில், திருவாரூர்.
தொலைபேசி எண்: 04366 224956.

வட்டார அளவிலான அலுவலகம் :

 • வேளாண்மை உதவி இயக்குநர், திருவாரூர்.
 • வேளாண்மை உதவி இயக்குநர், திருத்துறைப்பூண்டி.
 • வேளாண்மை உதவி இயக்குநர், முத்துப்பேட்டை.
 • வேளாண்மை உதவி இயக்குநர், மன்னார்குடி.
 • வேளாண்மை உதவி இயக்குநர், கோட்டூர்.
 • வேளாண்மை உதவி இயக்குநர், நீடாமங்கலம்.
 • வேளாண்மை உதவி இயக்குநர், வலங்கைமான்.
 • வேளாண்மை உதவி இயக்குநர், குடவாசல்.
 • வேளாண்மை உதவி இயக்குநர், கொரடாச்சேரி.
 • வேளாண்மை உதவி இயக்குநர், நன்னிலம்.

03மாவட்ட அளவில்வேளாண்மை துணை இயக்குநர்,
(மாநில திட்டம்)7397753312

மாவட்ட அளவில் – 17.04.2018-ல் அன்றைய நிலையில் பணியிலுள்ள அலுவலர்கள்
வ.எண் மாவட்ட அளவில் பெயர் மற்றும் பதவி தொடர்பு எண்
01 மாவட்ட அளவில் திரு.பா.சங்கரன்,பி.எஸ்ஸி(விவ)
வேளாண்மை இணை இயக்குநர்,
திருவாரூர்.
7397753311
02 மாவட்ட அளவில் வேளாண்மை துணை இயக்குநர்,
(மத்திய திட்டம்)
7397753313
04 மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,
(வேளாண்மை),
மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர்.
7397753329
05 மாவட்ட அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்
(தரக்கட்டுப்பாடு)(பொ)
7397753314
06 மாவட்ட அளவில் வேளாண்மை அலுவலர்
(மத்திய திட்டம்)(பொ)
7397753316
07 மாவட்ட அளவில் வேளாண்மை அலுவலர்
(மாநில திட்டம்)
7397753315
08 மாவட்ட அளவில் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) 7397753317
09 மாவட்ட அளவில் வேளாண்மை அலுவலர்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்,
(வேளாண்மை),
மாவட்ட ஆட்சியரகம், திருவாரூர்.
7397753330

 

 

வட்டார அளவில் – 17.04.2018-ல் அன்றைய நிலையில் பணியிலுள்ள அலுவலர்கள்
வ.எண் வட்டார அளவில் பெயர் மற்றும் பதவி தொடர்பு எண்
01 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,(பொ)
திருவாரூர்.
7397753318
02 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
திருத்துறைப்பூண்டி.
7397753320
03 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
முத்துப்பேட்டை
7397753321
04 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ),
மன்னார்குடி.
7397753322
05 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
கோட்டூர்
7397753323
06 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
நீடாமங்கலம்
7397753324
07 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
வலங்கைமான்
7397753325
08 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
குடவாசல்
7397753326
09 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
கொரடாச்சேரி
7397753327
10 வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர்,
நன்னிலம்
7397753328