மூடு

தோட்டக்கலைத்துறை

முன்னுரை:

திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள் காய்கறி பயிர்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் மலர்கள் சுமார் 1100 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பழப்பயிரகள் 620 எக்டேர் பரப்பளவிலும் காய்கறி பயிர்கள் 280 எக்டேர் பரப்பளவிலும் மலர்கள் 20 எக்டேர் பரப்பளவிலும் மலைத்தோட்டம் மற்றும் நறுமணப்பயிர்கள் 60 எக்டேர் பரப்பளவிலும் இதர தோட்டக்கலைப் பயிர்கள் 160 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணப்யிர்களான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணப்பயிர்களான தோட்டக்கலைப் பயிரான மலர் சாகுபடி செய்வதன் மூலம் தினந்தோறும் வருவாய் பெறலாம். மற்றும் காய்கறி சாகுபடி மூலம் வாரம் முழுவதும் வருவாய் பெறலாம். பழப்பயிர்கள். சாகுபடி செய்வதன் மூலம் நிலையான நீடித்த வருமானம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பெறலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும். திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்இ எவ்வாறு பயளடையலாம்இ அணுக வேண்டிய அலுவலா்கள் யார் போன்ற விபரங்கள் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அறிந்து கொள்ள ஏதுவாக இத்துடன் பிரசுரம் வெளியிடப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் 2017-18

தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டம் (NADP)

 • முக்கனி அபிவிருத்தித் திட்டம்
 • பரப்பு அதிகரித்தல்:
  மா சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு மானியம் ரூ. 30,000/-
  பாரம்பரிய இரக வாழை சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு மானியம்
  .ரூ. 30,000/-

பரப்பு விரிவாக்கம்

வீரிய ரக காய்கறிகள் சாகுபடி

ஒரு எக்டருக்கு ரூ, 20,000/- மானியத்தில் வீரிய ரக விதைகள் மற்றும் குழித்தட்டு நாற்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

மிளகாய்:

ஒரு எக்டருக்கு ரூ, 12,000/- மானியத்தில் வீரிய ரக குழித்தட்டு நாற்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

மா அடா்வு நடவு:

ஒரு எக்டருக்கு ரூ, 9,840/- மானியத்தில் மா ஓட்டுச் செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணையிலிருந்து பெறப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

மா சாதா நடவு:

ஒரு எக்டருக்கு ரூ, 7,650/- மானியத்தில் மா ஓட்டுச் செடிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

கொய்யா சாதா நடவு:

ஒரு எக்டருக்கு ரூ9,900/- மானியத்தில் கொய்யா பதியன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

எலுமிச்சை:

ஒரு எக்டருக்கு ரூ 12,000/- மானியத்தில் எலுமிச்சை
கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதர பழவகைகள்:

ஒரு எக்டருக்கு ரூ, 9,900/- மானியத்தில் சப்போட்டா ஓட்டுச் செடிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

உதிரி மலர்கள்:

ஒரு எக்டருக்கு ரூ, 7,650/- மானியத்தில் மல்லிகை பதியன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (IHDS):

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பழச்செடிகள்,.காய்கறி விதைகள், 40% மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது.

பிரதம மந்திரி வேளாண் நீர்பாசனத் திட்டம்(PMKSY):

நுண்ணீர் பாசனத் திட்டம்
சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச ஒரு விவசாயிகளுக்கு 5 எக்டர் வரை மானியம் வழங்கப்பட்டது. (போக்குவரத்து செலவு மற்றும் பிட்டிங் செலவு தவிர்த்து)

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (PMFBY):

இத்திட்டத்தின்கீழ் வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தேசியங வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குா்/ தோட்டக்கலை அலுவலா/ உதவி தோட்டக்கலை அலுவலா் ஆகியோர்களை அணுகி பயன்பெறலாம்.

அனைத்து திட்டங்களிலும் பயன் அடைய தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்கள்:

 • சொந்த நிலம் மற்றும் நீா் ஆதாரம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டங்களில் பயன் பெறலாம்.
 • குத்தகை நிலமாக இருப்பின் 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை பத்திரம் இருத்தல் வேண்டும்.
 • நில ஆவணங்களான நகல் வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
 • சிறு/ குறு விவசாயிகள் சான்று (வட்டாட்சியரால் அளிக்கப்படும் சான்று)
 • மண்/நீா் பரிசோதனை அறிக்கை.

A.E. சுரேஷ்குமார், பி.எஸ்ஸி(தோ) எம்.பி.ஏ.,
தோட்டக்கலை துணை இயக்குநர், திருவாரூர்.
அலைபேசி எண்:9443847142.