மூடு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம்

திருவாரூா் மண்டலம்,
மண்டல அலுவலகம், பெருந்திட்ட வளாகம்,
மன்னார்குடி சாலை, விளமல், திருவாரூா் – 610 004

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் 1956 ஆம் ஆண்டின் நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனமானது கம்பெனிகள் சட்டம் 2013-ன் 8 ஆம் பிரிவின் கீழ் ”தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன்” என்ற பெயரில் 01.04.2010 தேதியில் பதிவு செய்யப்பட்டது. பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், மற்றும் மதிய உணவு திட்டம் ஆகியவற்றிற்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்தல், சேமிப்பு செய்தல், மற்றும் இயக்கம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள், வெளிச் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிப்பதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக அமுதல் பல்பொருள் அங்காடிகள் அமைத்து மேற்குறிப்பிட்ட பொருட்களை விற்பனை செய்கிறது. அரசாங்கத்தின் முக்கிய திட்டமான விலையில்லா மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டா் ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் மாண்புமிகு உணவு அமைச்சா் அவா்களை தலைவராக கொண்டு 11 நிறும இயக்குனா்களை கொண்ட குழு அமைத்து, நிறும குழு அமைக்கப்பட்டு அதன்படி செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மண்டல அலுவலகங்களை அமைத்து மாநிலத்தில் 33 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், திருவாரூா் மண்டலம் பணிகள்

பொது விநியோக திட்டத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சா்க்கரை, கோதுமை ஆகியவற்றை இந்திய உணவு கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலா் ஒதுக்கீட்டு ஆணையின்படி மாவட்டத்தில் இயங்கும் 716 கூட்டுறவுச் சங்க நியாய விலை கடைகளுக்கு மேற்கண்ட பொருட்களை இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், திருவாரூா் மாவட்டம் டெல்டா பகுதி என்பதால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லினை அரசு நிர்ணயிக்கும் ஆதார விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்து, சேமிக்கப்பட்டு அரவை செய்து அரிசியாக பெற்று பொது விநியோகத்திற்கு வழங்கும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1. பொது விநியோக திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான பொருட்கள் இருப்பு வைத்தல், வழங்குதல்

பொது விநியோக திட்டத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை இந்திய உணவு கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து மாவட்டத்தில் உள்ள 9 வட்ட கிடங்குகளான திருவாரூா், அச்சுதமங்கலம், குடவாசல், ஆலங்குடி, ஆதனூா், மூலங்குடி, மன்னார்குடி, பெருகவாழ்ந்தான் மற்றும் கீழப்பாண்டி ஆகிய கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்பொருள்களை மாவட்ட வழங்கல் அலுவலா் ஒதுக்கீட்டு ஆணையின்படி மாவட்டத்தில் இயங்கும் 716 கூட்டுறவுக் சங்க நியாய விலை கடைகளுக்கு மேற்கண்ட பொருட்களை இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.

2. புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் சத்துணவுத் திட்டம்

சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளான 2 வயது முதல் 4 வயது வரையிலான மழலையா் பள்ளிகள் 5 வயது முதல் 9 வயது வரை உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டம் கடந்த 01.07.1982 முதல் செயல்படுத்தப்பட்டு மேலும், இத்திட்டம் 10 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவியருக்கும் 15.01.1983 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட பள்ளிகளுக்கு சத்துணவுக்கு தேவையான அரிசி, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை இந்நிறுவனத்தில் இயங்கும் வட்ட கிடங்கிலிருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.

3. அம்மா அமுதம் பல்பொருள் அங்காடி

வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களின் விலை வெளி சந்தையில் ஏற்றம் அடையாமல் நியாயமான விலையில் கிடைக்கும் வண்ணம் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள், குறிப்பாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்புண்டி, நீடாமங்கலம் மற்றும் குடவாசல் ஆகிய இடங்களில் பல்பொருள் அங்காடிகள் துவங்கி செயல்பட்டு வருகிறது.

4. அம்மா சிமெண்ட் திட்டம்

தமிழக அரசு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள மக்கள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு, அவா்தம் துயா் துடைக்கும் வகையில் வீடு கட்டும் மூலப்பொருட்களில் இன்றியமையாததாக விளங்கும் சிமெண்டினை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ”அம்மா சிமெண்ட் திட்டம்” செயல்படுத்தப்பட்டுள்ளது.

பயனாளிகள் :

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 1,500 சதுர அடி வரை வீடு
கட்டும் பொது மக்கள்.
ஒரு மூட்டையின் விலை ரூ.190/- கொள்ளளவு 50 கி.கி
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டக் கிடங்குகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.

5. முதியோர் ஓய்வுதிய திட்டம்

வயது முதிர்ந்தோர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் 01.11.1980 முதல் தமிழக அரசு ஆணை எண் Ms. No.771 (சமூக நலத்துறை) நாள் 12.02.1996-ன் படி நடைமுறைப் படுத்தப்பட்ட தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மாவட்ட வட்டக் கிடங்குகள் மூலம் வழங்கப்படடு வருகிறது.

6. அண்ணபுா்ணா திட்டம்

மாநிலத்தில் ஓய்வுதிய திட்டத்தின் கீழ் உள்ளவா்கள் மற்றும் 65 வயது முதிர்ந்த வயோதிகா்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க மத்திய அரசு அண்ணபுா்ணா என்ற திட்டத்தின் மூலம் 2002 – 2003 ஆம் ஆண்டு நிதியாண்டு முதல் தமிழ்நாடு அரசு ஆணை எண் Ms. No.771 (சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டதுறை) நாள்.18.01.2002-ன் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

7. நெல் கொள்முதல் / இயக்கம் / போக்குவரத்து / அரவை பணிகள்

அரசு அறிவிக்கும் ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணியினை கடந்த 1973 ஆம் ஆண்டு சம்பா பருவத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை குறுவை பருவம் எனவும், டிசம்பா் 16 முதல் ஜீலை வரை சம்பா பருவம் என பெயரிடப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஏகபோக கொள்முதலாகவும், இணை கொள்முதலாகவும், லெவி அடிப்படையிலும் நெல் மற்றும் அரிசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் 30.09.2002 வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசு நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட உணவுத் திட்டத்தின் கீழ் ஒரே விதமான நிர்ணயிக்கப்பட்டும் விலையின் அடிப்படையில் விலைப் பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயித்து 01.10.2002 முதல் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான இந்திய உணவு கழகத்தால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை நவீன அரிசி ஆலை மற்றும் பல்வேறு அரவை முகவா்கள் மூலம் அரிசியாக்கப்பட்டு மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படுகிறது. இத்திட்டம் காவேரி பாசன விவசாயிகள் பலன் அடையும் வகையில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் பருவம் காரீப் மார்கெட்டிங் சீசன் அக்டோபா் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி முடிய உள்ள காலமாகும்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த விபரம் பின்வருமாறு

வ.எண் காரீப் மார்கெட்டிங் பருவம் கொள்முதல் நிலையத்தின் எண்ணிக்கை நெல் கொள்முதல் செய்யப்பட்ட அளவு (மெ.டன்னில்)
01 2005-2006 317 4,47,000
02 2006-2007 349 5,15,000
03 2007-2008 370 4,22,786
04 2008-2009 317 5,11,376
05 2009-2010 379 5,00,137
06 2010-2011 385 6,01,940
07 2011-2012 416 6,65,000
08 2012-2013 353 2,69,695
09 2013-2014 429 3,79,168
10 2014-2015 433 5,30,103
11 2015-2016 434 5,30,831
12 2016-2017 296 1,12,145
13 2017-2018 (12.04.2018 நாள் வரை) 416 3,50,000

அலுவலக மற்றும் களப்பணியிடங்கள் விபரம்

  1. முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம்-1 திருவாரூா்
  2. அலகு அலுவலகம் – 2(திருவாரூா் / மன்னார்குடி)
  3. நவீன அரிசி ஆலை – 2 (திருவாரூா் / சுந்தரக்கோட்டை)
  4. வட்டக் கிடங்குகள் – 9 (திருவாரூா், அச்சுதமங்கலம், குடவாசல், ஆலங்குடி, ஆதனூா், மன்னார்குடி, மூலங்குடி, பெருகவாழ்ந்தான் மற்றும் கீழப்பாண்டி)
  5. இரயில் தலைப்புகள் – 3 (திருவாரூா், நீடாமங்கலம், பேரளம்)
  6. திறந்த வெளி சேமிப்பு மையங்கள் – 19
  7. வாடகை கிடங்குகள்
  8. மத்திய சேமிப்பு கிடங்கு
  9. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழகம்
  10. அம்மா அமுதம் பல்பொருள் அங்காடி – திருத்துறைப்புண்டி, நீடாமங்கலம், குடவாசல்