மூடு

உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகம்

அலுவலகம் அலுவலக முகவரி
அலுவலகத்தின் பெயர் உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரக 3-வது தளம்,
திருவாரூர்.
அலுவலர் பதவி விவரம் உதவி இயக்குநர்(தணிக்கை)
அலுவலக தொலைபேசி எண் 04366 – 220962
அலுவலர் அலைபேசி எண் 7402607519
மின்னஞ்சல் முகவரி adaudit.tntvr@nic.in

adaudit.tntvr@gmail.com

பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் விவரம்:

  1. உதவி இயக்குநர்(தணிக்கை)-1
  2. வட்டார வளர்ச்சி அலுவலர் (செயல்/கண்காணிப்பாளர்)-1
  3. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்)-1
  4. உதவியாளர்-4
  5. இளநிலை உதவியாளர்-2
  6. பதிவறை உதவியாளர்-1
  7. ஈப்பு ஓட்டுநர்-1
  8. அலுவலக உதவியாளர்-1
  9. இரவுக்காவலர்-1
  10. துப்புரவு பணியாளர்-1

அலுவலக வரலாறு:

உதவி இயக்குநர்(தணிக்கை) அலுவலகம் 1998-ஆம் ஆண்டு முதல் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவருகிறது.

முதன் முதலில் மன்னார்குடியை தலைமையிடமாகக்கொண்டு 01.04.1974 முதல் 31.07.1997 வரை கோட்ட அளவில் செயல்பட்டுவந்துள்ளது. அதன்பிறகு 01.08.1997 முதல் வளர்ச்சி அலுவலகம்(தணிக்கை) என மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட அளவில் செயல்பட்டுவந்துள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள் விவரம்:

  1. ஊராட்சி ஒன்றியம் திருவாரூர்
  2. ஊராட்சி ஒன்றியம் மன்னார்குடி
  3. ஊராட்சி ஒன்றியம் திருத்துறைப்பூண்டி
  4. ஊராட்சி ஒன்றியம் நீடாமங்கலம்
  5. ஊராட்சி ஒன்றியம் கோட்டூர்
  6. ஊராட்சி ஒன்றியம் முத்துப்பேட்டை
  7. ஊராட்சி ஒன்றியம் கொரடாச்சேரி
  8. ஊராட்சி ஒன்றியம் குடவாசல்
  9. ஊராட்சி ஒன்றியம் வலங்கைமான்
  10. ஊராட்சி ஒன்றியம் நன்னிலம்

முக்கிய பணிகள்:

கிராம ஊராட்சிகளின் கணக்குகள் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது.

மாநில கணக்காயர் சென்னை மற்றும் உள்ளாட்சி நிதித்தணிக்கை இயக்குநர் ஆகியோரால் எழுப்பப்படும் தணிக்கை அறிக்கைமீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பின்படி பொதுக்கணக்குக்குழு பொது செயல்பாட்டுக்குழு மற்றும் மதிப்பீட்டுக்குழுக்களின் அறிக்கைமீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அம்மா சிமெண்ட் வழங்கும் திட்ட கிடங்குகள் மற்றும் TNSRLM கட்டுப்பாட்டில் செயல்படும் கிடங்கு ஆகியவற்றின் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்.

ஊராட்சி ஒன்றியங்களில் நிலுவையில் உள்ள தணிக்கைப்பத்திகளை நீக்கம்செய்வதற்கான உயர்மட்டக்குழுக் கூட்டம் நடத்துதல்.

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி நிதித்தணிக்கை துறையால் எழுப்பப்படும் தணிக்கை பத்திகளை நீக்கம் செய்வதற்கான கூட்டமர்வு நடத்துதல்.

கிராம ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள தணிக்கைப் பத்திகளை நீக்கம் செய்வதற்கான கூட்டமர்வு நடத்துதல்.

கிராம ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறையினரால் எழுப்பப்படும் 20% தணிக்கைப்பத்திகளை நீக்கம் செய்வதற்கான கூட்டமர்வு நடத்துதல்.