மூடு

வருவாய் கோட்ட அலுவலகம் மன்னார்குடி

திருவாரூா் மாவட்டம் 01.01.1997 அன்று நாகை காயிதேமில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறது. மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகமானது மன்னார்குடி. வ.உ.சி நகரில் செயல்பட்டு வருகிறது.

வருவாய் கோட்ட அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்

தமிழ்நாடு அரசாணை எண் 666 வருவாய் (X2) துறை நாள் 28.10.1994 அன்று கீழ்கண்ட விபரப்படி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  1. வருவாய் கோட்ட அலுவலா், மன்னார்குடி – 01
  2. வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் – 01
  3. தலைமை உதவியாளர் – 02
  4. உதவியாளா் – 05 தேர்தல்-1
  5. இளநிலை உதவியாளா் – 02
  6. தட்டச்சர் – 01
  7. சுருக்கெழுத்து தட்டச்சர் – 01
  8. பதிவுறு எழுத்தா் – 01
  9. அலுவலக உதவியாளா் – 04
  10. கூடுதல் – 18

அரசாணை (நிலை) எண் 554, வருவாய் (பணி 8(2)) துறை நாள் 24.11.2014 ன் படி ஒரு தோட்டக்காரர் பணியிடம் ஏற்பளிக்கப்பட்டுள்ளது. .
முதன்மை செயலர் கடித எண் 10517ஃபணி-5/2018-2 நாள் 26.03.2018 ன் படி ஒரு மசால்கூி மற்றம் ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடம் ஏற்பளிக்கப;பட்டுள்ளது.
கூடுதல் பணியிடம்–21

தற்போது நிரப்பப்பட்ட பணியிடங்கள் விபரம்

  1. வருவாய் கோட்ட அலுவலா், மன்னார்குடி – 01
  2. வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் – 01
  3. தலைமை உதவியாளர் – 02
  4. உதவியாளா் – 04 தேர்தல்-1
  5. இளநிலை உதவியாளா் – 02
  6. தட்டச்சர்
  7. சுருக்கெழுத்து தட்டச்சர்
  8. பதிவுறு எழுத்தா்
  9. அலுவலக உதவியாளா் – 01
  10. ஈப்பு ஓட்டுநர்
  11. மசால்ஜி – 01
  12. தோட்டக்காரர்
  13. கூடுதல் – 12

வருவாய் கோட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் வழங்கப்படும் சான்றுகள் விபரம்

  1. வீடுகட்டும் முன்பணம் பெறுவது தொடா்பான ஆய்வு
  2. முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் மனுக்களுக்கான பதிலறிக்கை.
  3. ஆதரவற்ற விதவை சான்று வழங்குதல்.
  4. பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்குதல். (அரசாணை எண் 293 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (AB2) நாள் 02.12.2016-ன்படி)
  5. மரபுரிமைச்சான்று வழங்குதல்.
  6. பழங்குடியினா் சாதிச்சான்று வழங்குதல்
  7. சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்த்தல் அறிக்கை.
  8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005
  9. முன்னாள் படைவீரா் நலன்
  10. வருவாய் வசூல் சட்ட பணிகள்
  11. தோ்தல் தொடா்பான பணிகள்
  12. புதிய வாக்காளா்கள் சோ்த்தல் மற்றும் வாக்காளா்களின் பெயா் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்.
  13. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்
  14. பயிர் முன்னாய்வு செய்தல்
  15. கிராம நிர்வாக அலுவலா் பணியமைப்பு
  16. கிராம உதவியாளா்களின் பணியமைப்பு
  17. அடகு பொருள் சட்டம் தொடா்பான பணிகள்
  18. படைக்கல சட்டம் தொடா்பான பணிகள்
  19. தோ்வுகள் தொடா்பான பணிகள்
  20. பாசனம் தொடா்பான பணிகள்
  21. விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் தொடா்பான பணிகள்
  22. வீட்டுமனை ஒப்படை
  23. நில ஒப்படை
  24. நிலமதிப்பு நிர்ணயம் செய்தல்
  25. நில எடுப்பு, நில மாற்றம், நில உரிமை மாற்றம்
  26. சுரங்கம் மற்றும் கனிமவளம் தொடா்பான பணிகள்
  27. உபரி நில கிரயம் செய்தல்
  28. நிலச்சீா்த்திருத்தம் தொடா்பான பணிகள்
  29. குத்தகை தொடா்பான பணிகள்
  30. ஆக்கிரமணம் அகற்றம் தொடா்பான பணிகள்
  31. நில உடமை மேம்பாட்டு திட்ட குறைபாடுகள் களைதல்
  32. நத்தம் நிலவரி திட்ட அலுவலில் கண்டறியப்பட்ட குறைபாடு மேல்முறையீடு
  33. பட்டா மாறுதல் மேல்முறையீடு
  34. மரங்கள் தொடா்பான பணிகள்
  35. மீன்பாசி குத்தகை தொடா்பான பணிகள்
  36. தொழிலாளா் நலவாரியம் தொடா்பான பணிகள்
  37. குற்றவியல் சட்டம் பிரிவு 107, 109, 110, 145- தொடா்பான பணிகள்
  38. சட்டம் ஒழுங்கு பராமரித்தல் தொடா்பான பணிகள்
  39. சந்தேக மரணம் (பிரிவு 174) – விசாரணை தொடா்பான பணிகள்
  40. வெடிமருந்து சட்டம் (படிவம் 20 மற்றும் படிவம் 24) தொடா்பான பணிகள்
  41. கலால் மற்றும் ஆயத்தீா்வை தொடா்பான பணிகள்
  42. குடியுரிமை சட்டம் தொடா்பான பணிகள்
  43. மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் தொடா்பான பணிகள்
  44. அச்சக உரிமம் மற்றும் பத்திரிக்கை பதிவு சட்டம் தொடா்பான பணிகள்
  45. இயற்கை இடா்பாடு மற்றும் நிவாரணம் வழங்குதல் தொடா்பான பணிகள்
  46. புதை பொருள் தொடா்பான பணிகள்
  47. அரசு மற்றும் பொது கட்டிடங்கள் உரிமம் வழங்குதல் தொடா்பான பணிகள்
  48. இலங்கை, பா்மா அகதிகள் தொடா்பான பணிகள்
  49. முத்திரைத்தாள் சட்டம் தொடா்பான பணிகள்
  50. திரையரங்கு சட்டம் தொடா்பான பணிகள்
  51. சாலை விபத்து நிவாரணம் தொடா்பான பணிகள்

தோ்தல் தொடா்பான விபரங்கள்

வ. எண் வாக்காளா் பதிவு அலுவலரின் விபரம் திருவாரூா் கோட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி
01 வருவாய் கோட்ட அலுவலா்,
மன்னார்குடி
166 திருத்துறைப்பூண்டி

167 மன்னார்குடி

 

வ. எண் உதவி வாக்காளா் பதிவு அலுவலரின் பதவி
01 வட்டாட்சியா், மன்னார்குடி
02 வட்டாட்சியா், நீடாமங்கலம்
03 வட்டாட்சியா், திருத்துறைப்பூண்டி
04 வட்டாட்சியா், கூத்தாநல்லூா்
05 ஆணையா், நகராட்சி, மன்னார்குடி
06 ஆணையா், நகராட்சி, திருத்துறைப்பூண்டி

மன்னார்குடி கோட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள நியமன இடங்கள்

வ. எண் சட்டமன்ற தொகுதியின் பெயா் மற்றும் எண் நியமன இடங்களின் எண்ணிக்கை நியமன அலுவலா்களின் எண்ணிக்கை
01 166 திருத்துறைப்பூண்டி 108 108
02 167 மன்னார்குடி 154 154

மன்னார்குடி கோட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா் விபரம்

வ. எண் வட்டத்தின் பெயா் பாகங்களின் எண்ணிக்கை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் எண்ணிக்கை வாக்குச்சாவடி மையத்தின் எண்ணிக்கை
01 மன்னார்குடி 263 263 263
02 நீடாமங்கலம் 75 75 75
03 கூத்தாநல்லூா் 17 17 17
04 திருத்துறைப்பூண்டி 192 192 192
547 547 547

மக்கள் தொகை விபரம் (2018-ல் எதிர்பார்க்கப்பட்ட)

வ. எண் சட்டமன்ற தொகுதியின் பெயா் ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
01 166 திருத்துறைப்பூண்டி 152462 157223 0 309685
02 167 மன்னார்குடி 157787 161767 0 319554
310249 318990 0 629239

சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளா்களின் விபரம் –

10.01.2018-ல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி

வ. எண் சட்டமன்ற தொகுதியின் பெயா் ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
01 166 திருத்துறைப்பூண்டி 113287 116179 02 231288
02 167 மன்னார்குடி 120762 125322 04 246088
மன்னார்குடி கோட்டத்திற்குட்பட்ட மொத்த வாக்காளா்கள் 234049 241501 06 477376

 

பொது

மேற்படி பணிகளுடன் அவ்வபோது அவசியம் மற்றும் அவசர சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாளுதல், சாலை மறியல், இரயில் மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் பொழுது சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு நிர்வாக நடுவா்கள் நியமனம் செய்தல் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்படும் புகார்கள் தொடா்பான விசாரணை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருவாய் கோட்ட அலுவலா்,

மன்னார்குடி