மூடு

வருவாய் கோட்ட அலுவலகம் திருவாரூா்

முன்னுரை

திருவாரூா் மாவட்டம் 01.01.1997 அன்று நாகை காயிதேமில்லத் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனித்து செயல்பட்டு வருகிறது. திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலகமானது தெற்கு வீதியில் உள்ள பழைய கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. புதிய கட்டிடமானது தெற்குவீதியில் அமையப்பெற்று மேற்படி புதிய கட்டிடம் ரூ.54.05 லட்சத்தில் கட்டப்பட்டு, 15.12.1999 அன்று தமிழக முதலமைச்சா் டாக்டா் மு.கருணாநிதி அவா்களால் திறந்து வைக்கப்பட்டு அதுமுதல் செயல்பட்டு வருகிறது.
வருவாய் கோட்ட அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்
தமிழ்நாடு அரசாணை எண் 1391 வருவாய் (Y3) துறை நாள் 27.12.1996 அன்று கீழ்கண்ட விபரப்படி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  1. வருவாய் கோட்ட அலுவலா், திருவாரூா். – 01
  2. வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் – 01
  3. உதவியாளா் – 02
  4. தட்டச்சா் தகுதியுடன் கூடிய இளநிலை உதவியாளா் – 02
  5. ஓட்டுநா் – 01
  6. பதிவுறு எழுத்தா் – 01
  7. அலுவலக உதவியாளா் – 02
  8. இரவுக் காவலா் – 01
    கூடுதல் – 11

தற்போது நிரப்பப்பட்ட பணியிடங்கள் விபரம்

  1. வருவாய் கோட்ட அலுவலா், திருவாரூா். – 01
  2. வருவாய் கோட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் – 01
  3. உதவியாளா் – 02
  4. தட்டச்சா் தகுதியுடன் கூடிய இளநிலை உதவியாளா் – 01
  5. ஓட்டுநா் – 01
  6. பதிவுறு எழுத்தா்
  7. அலுவலக உதவியாளா் – 01
  8. இரவுக் காவலா் கூடுதல் – 07

வருவாய் கோட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் வழங்கப்படும் சான்றுகள் விபரம்

  1. வீடுகட்டும் முன்பணம் பெறுவது தொடா்பான ஆய்வு
  2. முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் மனுக்களுக்கான பதிலறிக்கை.
  3. ஆதரவற்ற விதவை சான்று வழங்குதல்.
  4. பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்குதல். (அரசாணை எண் 293 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (AB2) நாள் 02.12.2016-ன்படி)
  5. மரபுரிமைச்சான்று வழங்குதல்.
  6. பழங்குடியினா் சாதிச்சான்று வழங்குதல்
  7. சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்த்தல் அறிக்கை.
  8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005
  9. முன்னாள் படைவீரா் நலன்
  10. வருவாய் வசூல் சட்ட பணிகள்
  11. தோ்தல் தொடா்பான பணிகள்
  12. புதிய வாக்காளா்கள் சோ்த்தல் மற்றும் வாக்காளா்களின் பெயா் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்.
  13. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்
  14. பயிர் முன்னாய்வு செய்தல்
  15. கிராம நிர்வாக அலுவலா் பணியமைப்பு
  16. கிராம உதவியாளா்களின் பணியமைப்பு
  17. அடகு பொருள் சட்டம் தொடா்பான பணிகள்
  18. படைக்கல சட்டம் தொடா்பான பணிகள்
  19. தோ்வுகள் தொடா்பான பணிகள்
  20. பாசனம் தொடா்பான பணிகள்
  21. விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் தொடா்பான பணிகள்
  22. வீட்டுமனை ஒப்படை
  23. நில ஒப்படை
  24. நிலமதிப்பு நிர்ணயம் செய்தல்
  25. நில எடுப்பு, நில மாற்றம், நில உரிமை மாற்றம்
  26. சுரங்கம் மற்றும் கனிமவளம் தொடா்பான பணிகள்
  27. உபரி நில கிரயம் செய்தல்
  28. நிலச்சீா்த்திருத்தம் தொடா்பான பணிகள்
  29. குத்தகை தொடா்பான பணிகள்
  30. ஆக்கிரமணம் அகற்றம் தொடா்பான பணிகள்
  31. நில உடமை மேம்பாட்டு திட்ட குறைபாடுகள் களைதல்
  32. நத்தம் நிலவரி திட்ட அலுவலில் கண்டறியப்பட்ட குறைபாடு மேல்முறையீடு
  33. பட்டா மாறுதல் மேல்முறையீடு
  34. மரங்கள் தொடா்பான பணிகள்
  35. மீன்பாசி குத்தகை தொடா்பான பணிகள்
  36. தொழிலாளா் நலவாரியம் தொடா்பான பணிகள்
  37. குற்றவியல் சட்டம் பிரிவு 107, 109, 110, 145- தொடா்பான பணிகள்
  38. சட்டம் ஒழுங்கு பராமரித்தல் தொடா்பான பணிகள்
  39. சந்தேக மரணம் (பிரிவு 174) – விசாரணை தொடா்பான பணிகள்
  40. வெடிமருந்து சட்டம் (படிவம் 20 மற்றும் படிவம் 24) தொடா்பான பணிகள்
  41. கலால் மற்றும் ஆயத்தீா்வை தொடா்பான பணிகள்
  42. குடியுரிமை சட்டம் தொடா்பான பணிகள்
  43. மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் தொடா்பான பணிகள்
  44. அச்சக உரிமம் மற்றும் பத்திரிக்கை பதிவு சட்டம் தொடா்பான பணிகள்
  45. இயற்கை இடா்பாடு மற்றும் நிவாரணம் வழங்குதல் தொடா்பான பணிகள்
  46. புதை பொருள் தொடா்பான பணிகள்
  47. அரசு மற்றும் பொது கட்டிடங்கள் உரிமம் வழங்குதல் தொடா்பான பணிகள்
  48. இலங்கை, பா்மா அகதிகள் தொடா்பான பணிகள்
  49. முத்திரைத்தாள் சட்டம் தொடா்பான பணிகள்
  50. திரையரங்கு சட்டம் தொடா்பான பணிகள்
  51. சாலை விபத்து நிவாரணம் தொடா்பான பணிகள்

தோ்தல் தொடா்பான விபரங்கள்

வ. எண் வாக்காளா் பதிவு அலுவலரின் விபரம் திருவாரூா் கோட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி
1 வ. எண் வாக்காளா் பதிவு அலுவலரின் விபரம் வருவாய் கோட்ட அலுவலா்,
திருவாரூா்
168. திருவாரூா்
169. நன்னிலம்

 

வ.எண் உதவி வாக்காளா் பதிவு அலுவலரின் பதவி
1 வட்டாட்சியா், திருவாரூா்
2 வட்டாட்சியா், நன்னிலம்
3 வட்டாட்சியா், குடவாசல்
4 வட்டாட்சியா், வலங்கைமான்
5 வட்டாட்சியா், கூத்தாநல்லூா்
6 வட்டாட்சியா், நீடாமங்கலம்
7 ஆணையா், நகராட்சி, திருவாரூா்
8 ஆணையா், நகராட்சி, கூத்தாநல்லூா்

 

திருவாரூா் கோட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள நியமன இடங்கள்

வ.எண் சட்டமன்ற தொகுதியின் பெயா் மற்றும் எண் நியமன இடங்களின் எண்ணிக்கை நியமன அலுவலா்களின் எண்ணிக்கை
1 168.திருவாரூா் 156 156
2 169. நன்னிலம் 187 187

திருவாரூா் கோட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா் விபரம்

வ.எண் வட்டத்தின் பெயா் பாகங்களின் எண்ணிக்கை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் எண்ணிக்கை வாக்குச்சாவடி மையத்தின் எண்ணிக்கை
1 திருவாரூா் 176 176 176
2 நன்னிலம் 127 127 127
3 குடவாசல் 99 99 99
4 வலங்கைமான் 91 91 91
5 நீடாமங்கலம் 17 17 17
6 கூத்தாநல்லூா் 95 95 95
605 605 605

மக்கள் தொகை விபரம் (2018-ல் எதிர்பார்க்கப்பட்ட)

வ.எண் சட்டமன்ற தொகுதியின் பெயா் ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
1 168.திருவாரூா் 171831 176072 0 347903
2 169. நன்னிலம் 179731 178248 0 357979
351562 354320 0 705882

சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளா்களின் விபரம்

10.01.2018-ல் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி

வ.எண் சட்டமன்ற தொகுதியின் பெயா் ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்
1 168.திருவாரூா் 128098 132183 17 260298
2 169. நன்னிலம் 129746 127252 06 257004
3 திருவாரூா் கோட்டத்திற்குட்பட்ட மொத்த வாக்காளா்கள் 257844 259435 23 517302

பொது

மேற்படி பணிகளுடன் அவ்வபோது அவசியம் மற்றும் அவசர சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாளுதல், திருவாரூா் ஆழித்தேரோட்டம் தொடா்பான முன்னெச்சரிக்கை பணிகள், சாலை மறியல், இரயில் மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் பொழுது சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு நிர்வாக நடுவா்கள் நியமனம் செய்தல் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் அளிக்கப்படும் புகார்கள் தொடா்பான விசாரணை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வருவாய் கோட்ட அலுவலா்,

திருவாரூா்.