மூடு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

முன்னுரை

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகமானது தலைமைச் செயலக அளவில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டிலும், மாநில அளவில் சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களின் கட்டுப்பாட்டிலும் இயங்குகிறது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து மறுவாழ்வு பணிகளும் அரசு உத்தரவுகளின்படி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.

துறையின் நோக்கமும் குறிக்கோள்களும்

மாற்றுத் திறனாளிகள் தங்களின் இலக்கை அடைவதற்கு நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மருத்துவம், உளவியல், கல்வி, தொழில் மற்றும் சமூக பொருளாதார உதவிகள் செய்து, மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் முழுமையான மறுவாழ்வு அல்லது ஒருங்கிணைந்த மறுவாழ்வு அளிக்கும் வகையில் நலத்திட்ட மற்றும் மறுவாழ்வு உதவிகளை செய்து மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் உரிய வாய்ப்புகளை அவர்கள் பெற்று பயனடையுமாறு பணிபுரிவதே இத்துறையின் நோக்கமாகும். மாற்றுத் திறனாளிகள் தங்களிடம் உள்ள தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் தனச்சிறப்பு மிக்க அவர்களது திறமைகளை உணரும்படி விழிப்பூட்டி, ஊனத்தால் ஏற்பட்டுள்ள தடைகளை தகர்த்தெரிய அறிவுறுத்துவதோடு, வாழ்க்கையில் முன்னேருவதற்கு துறை மூலமாக உதவி புரிதல்.

ஊனத்தின் வகைப்பாடுகள்

21 வகையான மாற்றுத்திறனாளிகள் விபரம்

வ.எண் மாற்றுத்திறனாளிகள் வகை மருத்துவ சான்று பெற வேண்டிய மருத்துவர்கள்
1 Locomotor Disability – கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் முடநீக்கு மருத்துவர் / உடலியக்க மருத்துவம் மற்றும் மறுவாழ்வு மருத்துவர்
2 Leprosy Cured –தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
3 Cerebral Palsy – பெருமூளை வாதம்
4 Dwarfism – குள்ளத்தன்மை
5 Muscular Dystrophy – தசை சிதைவு நோய்
6 Acid Attack Victims – ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்
7 Blindness – கண் பார்வையற்றவர் கண் மருத்துவர்
8 Low Vision – கண் குறைபாடுடையவர் கண் மருத்துவர்
9 Deaf – வாய் பேசாதவர்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்
10 Hard of Hearing – காது கேளாதவர்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்
11 Speech and Language Disability – பேச இயலாதவர்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்
12 Intellectual Disability – அறிவார்ந்த இயலாமை மனநல மருத்துவர்
13 Specific Learning Disability – கற்றல் குறைபாடு மனநல மருத்துவர்
14 Autism Spectrum Disorder – புற உலக சிந்தனை இயலாமை மனநல மருத்துவர்
15 Mental Illness – மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மனநல மருத்துவர்
16 Multiple Sclerosis – திசு பன்முக கடினமாதல் முடநீக்கு மருத்துவர்
17 Parkinson’s Disease – நடுக்கு வாதம் நரம்பியல் மருத்துவர்
18 Haemophilia – இரத்தம் உறையாமை முடநீக்கு மருத்துவர்
19 Thalassemia – இரத்த அழிவு சோகை
20 Sickle Cell Disease – இரத்த சோகை
21 Chronic Neurological Conditions – நாட்பட்ட நரம்பியல் நிலைமைகள் நரம்பியல் மருத்துவர்

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID அவசியமாகும்

வ.எண் திட்ட விவரங்கள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் உரிய விண்ணப்பங்கள்
01 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது அரசு சிறப்பு மருத்துவர்களிடம் பெற்ற மருத்துவ சான்று அசல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-4 Form IV
மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES) www.swavlambancard.gov.in மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், மருத்துவ சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-1, தொலைபேசி எண் UDID Application
மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரிய அட்டை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்ற 10 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் போதே நலவாரிய பதிவும் செய்யப்படுகிறது. விண்ணப்பம் தேவையில்லை
02 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000;

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள் வரை ரூ.4000

பட்டயம் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு ரூ.6000/-
முதுகலை பட்டப்படிப்பு ரூ.7000/-

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று

 

Scholarship Application
03  வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம் 

சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்

பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்கள், உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். சேமிப்பு வங்கி கணக்கு புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: ரூ.75000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.25000 மானியம் வழங்கப்படும;

Bank Loan Applications
04  மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை -மாதம் ரூ.2000/-

மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

45 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

வருவாய் துறை மூலம் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறாதவர்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை 40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்

 

 

 

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம்–1,  தொலைபேசி.எண்

MG Application
தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை
கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை 75 விழுக்காடுக்கு மேல் கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

வருவாய் துறை மூலம் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறாதவர். சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு மூலம் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும்

அதிக உதவித் உதவிப்படுவோருக்கு வழங்கும் உதவித்தொகை (மருத்துவ குழுவினரால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும்) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருபவராக இருத்தல் வேண்டும்

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,
05 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி

1 முதல் 12 வுகுப்பு வரை (ரூபாய் 25000 மற்றும் மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்)

பட்டதாரிகளுக்கு (ரூபாய் 50000 மற்றும் தாலிக்கு தங்கம் 8 கிராம்)

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக் கூடாது. 18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி தகுதிச் சான்று, திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று, வேறு துறைகளில் விண்ணப்பக்கவில்லை என்ற சான்று.
06 உதவி உபகரணங்கள் 

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (Retrofitted Petrol Scooter) (தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும்)

1) 18 வயது நிரம்பிய கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். 2). இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும் 3). மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் (ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்)

 

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று

 

Retrofitted Scooter application_21
முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்)
பேட்டரியால் இயங்க கூடிய சக்கர நாற்காலி முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவாகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. Aids & Appliances Application
மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் (Motorised Sewing Machine)

 

கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள்; மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் 75 சதவீதம் மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள்
18 வயதுக்கு மேல் 60 வயது வரை.
உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று. Sewing Machine Application
மூன்று சக்கர சைக்கிள் (Tricycle)

 

இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் கைகளில் வலு இருத்தல் வேண்டும்

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

12 வயதுக்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும்

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, UDID அட்டை நகல்,  நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் Aids & Appliances Application
சக்கர நாற்காலி (Wheel Chair) இரண்டு கால்களும் கைகளும் செயல் பாதிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்
காதொலி கருவி (Hearing Aid)

 

செவித்திறன் குறையுடையவர்கள 3 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள்.  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல், காது பரிசோதனை சான்று (Audiogram) புகைப்படம்.
காதுக்கு பின் அணியும் காதொலி கருவி (Behind the Hearing Aid)- BTE மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

6ம் வகுப்புக்கு மேல் கல்வி பயில்பவர்கள் மற்றும் பணிபுரிவர்கள் 11 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள்

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் காது பரிசோதனை சான்று (Audiogram) புகைப்படம்.
பார்வையற்றவர்களுக்கான நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல் (Folding Stick) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 12 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள்

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம். கல்வி பயிலும் மற்றும் பணிபுரிவதற்கான சான்று
பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி கைகடிகாரம் (Braille Watch)

 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ அல்லது பணிபுரிபவராகவோ இருத்தல் வேண்டும்.

 

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பணிச்சான்று அல்லது கல்விச் சான்று புகைப்படம்.
பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உறுப்பெறுக்கி (Magnifier)

 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

பார்வை குறையுடைய மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.

 உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று, புகைப்படம்.
செயற்கை அவயம் (Artificial Limb) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

விபத்து மற்றும் நோயினால் கால் துண்டிக்கப்பட்டவர்கள்

முதலமைச்சரின் விரிவாக மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்திருக்க வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை நகல்,  புகைப்படம்.
முடநீக்கு சாதனம் Caliper)

 

இளம்பிள்ளை வாதம் அல்லது மூளைமுடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.
ஊன்றுகோல் (Crutches)

 

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.
07 மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும் நிறுவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று Bus Pass Application
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை (மாவட்டம் முழுவதும் சென்று வர) பார்வையற்றவர்; என தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும் விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3,
அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை (தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ்)

 

தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது. தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் மற்றும் UDID அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்

 

 

 

அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை

 

 

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும். மருத்துவரிடம் துணையாளருடன் பயணம் செய்ய தகுதியைடயவர் என மருத்துவ சான்று மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் UDID அட்டை ஆகிய நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்

 

Escort form
புதிய திட்டம் (2021 – 2022 முதல் )

தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்களின் வகை மற்றும் மாதிரியியல் தேர்வினை (Choice Based) வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டம்

பேட்டரியால் இயங்க கூடிய சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் தையல் இயந்திரம் ஆகியவற்றை பெற தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் தாங்கள் விரும்பிய மாடலை தேர்வு செய்யலாம்.

Wheel Chair, Tricycle, Hearing Aid ஆகியவற்றை பெற விண்ணப்பிக்கும் போது விரும்பிய மாடல் தேர்வு செய்யலாம். தேர்வு செய்யும் உபகரணத்தின் விலைக்கும் இலவசமாக வழங்கப்படும் உபகரணத்தின் விலைக்கும் உள்ள வித்தியாச தொகையினை ஆணையரகத்திற்கு வரைவோலையாக வழங்க வேண்டும்

 

 

 

விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல்,  UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்.

 

 

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்

மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தின் வாயிலாக கீழ்குறிப்பிட்ட சமுக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நலவாரியத்தில் சேர்ந்து மேற்காணும் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

1 தனி நபர் விபத்து நிவாரணம்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணம் பின்வருமாறு:
(அ) கை அல்லது கால் இழப்பு அல்லது முழுமையான செயலிழப்பு ரூ.1,00,000
(ஆ) ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் பார்வை இழப்பு அல்லது முழுமையான செயலிழப்பு ரூ.50,000
(இ) நிரந்தரம், மொத்த ஊனம் (‘அ’ மற்றும் ‘இ’ தவிர்த்து) ரூ.25,000
(ஈ) விபத்து இறப்பு ரூ.1,00,000 Application.pdf
2 மாற்றுத் திறனாளி நபரின் இறுதிச் சடங்கிற்கு ரூ.2,000

Application.pdf

3 மாற்றுத் திறனாளி நபரின் இயற்கை மரணத்திற்கு ரூ.15,000

Application.pdf

4 மாற்றுத் திறனாளியின் மகன் அல்லது மகள் கல்வி பயில உதவித் தொகை
(அ)1 விண்ணப்பதாரரின் 10ஆம் வகுப்பு பயிலும் மகளுக்கு ரூ.1,000

Application.pdf

(அ)2 விண்ணப்பதாரரின் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் அல்லது மகளுக்கு ரூ.1,000

Application.pdf

(ஆ)1 விண்ணப்பதாரரின் 11 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமாக பயிலும் மகளுக்கு ரூ.1,000

Application.pdf

(இ)1 விண்ணப்பதாரரின் 12 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு சமமாக பயிலும் மகளுக்கு ரூ.1,500

Application.pdf

(இ)2 விண்ணப்பதாரரின் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் அல்லது மகளுக்கு ரூ.1,500

Application.pdf

(ஈ)1 விண்ணப்பதாரரின் முறையான பட்டப்படிப்பு பயின்று வரும் மகன் அல்லது மகளுக்கு ரூ.1,500

Application.pdf

(ஈ)2 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.1,750

Application.pdf

(ஈ)3 விண்ணப்பதாரரின் பட்ட மேற்படிப்பு பயின்று வரும் மகன் அல்லது மகளுக்கு ரூ.2,000

Application.pdf

(ஈ)4 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.3,000

Application.pdf

(உ)1 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் சட்டம் / பொறியியல் / மருத்துவம் / கால்நடை அறிவியல் அல்லது அதற்கு இணையான தொடர்பான தொழிற்கல்வி படிப்புகள் ரூ.2,000

Application.pdf

(உ)2 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.4,000

Application.pdf

(உ)3 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் தொழிற்கல்வி, பட்ட மேற்படிப்பு படிக்க ரூ.4,000

Application.pdf

(உ)4 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.6,000

Application.pdf

(ஊ)1 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் தொழிற்பயிற்சி நிலையம் அல்லது பாலிடெக்னிக்குகளில் படிக்க ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் ரூ.1,000

Application.pdf

(ஊ)2 விண்ணப்பதாரரின் மகன் அல்லது மகள் விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.1,200
5 திருமண உதவித் தொகை கணவன் அல்லது மனைவி இருவரும் விண்ண்ப்பித்தாலும் ஒருவருக்கு மட்டுமே இவ்வுதவி வழங்கப்படும் ரூ.2,000
6 வாரியத்தின் பெண் உறுப்பினர்களுக்கு பிரசவம் அல்லது கருச்சிதைவு அல்லது கருக்கலைப்புக்கு நிதியுதவி
1.மகப்பேறு ரூ.6,000
2.கருச்சிதைவு ரூ.3,000
3.கருக்கலைப்பு ரூ.3,000
7 மாற்றுத்திறனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க நிதியுதவி ரூ.500

 

வ.எண் பிற துறைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள்


1 தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி (அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகளை அணுகவும்) (1)மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

வேறு எந்த வங்கியிலும் கடன் பெற்று நிலுவையில் இல்லாமல் இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

(2) கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்

ரூ.25000/- வரை கடன் பெற 1 நபர் ஜாமின் மற்றும்

ரூ.50000/- வரை கடன் பெற 2 நபர் ஜாமின் வழங்க வேண்டும்

உரிய விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்

தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை

 

2 பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

www.kviconline.gov.in/pmegp

தொடர்புக்கு.04366 224402

 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி,

வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத்திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு 25000/- வரை

சேவை சார்ந்த தொழில்களுக்கு 10000/- வரை

 

இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை, இடத்திற்கான வாடகை ஒப்பந்த பத்திர நகல்,  புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையத்தில் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வழங்கப்படும் உதவி: ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கடன் வழங்க வங்கி ஒப்புதல் செய்யும்பட்சத்தில் 5 விழுக்காடு மானியம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமும், 15 – 25 விழுக்காடு மானியம் மாவட்ட தொழில் மையம் மூலமும் வழங்கப்படுகிறது.
3 படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

www.msmeonline.tn.gov.in/uyegp

தொடர்புக்கு.04366 224402

 

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

1)     8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது வரை.

2)     குடும்ப ஆண்டு வருமானம் 5,00,000/-க்குள் இருக்க வேண்டும்

 

இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வழங்கப்படும் உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
4 மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிறசிகள் (IOB RESETI இணைந்து இலவச குறுகிய கால தொழிற்பயிறசிகள் அளிக்கப்படுகிறது)

தொடர்புக்கு.04366 244299

 

18 முதல் 45 வயது வரை

கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், காதுகேளாதோர், கண் பார்வையற்றவர்கள்

.பட்டியல் இணைக்கப்படுகிறது.

10 முதல் 30 நாட்கள் வரை குறுகிய கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது

5 மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு அட்டை (CMCHIS)

 

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்.

 

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி நேரில் வந்து CMCHIS மையத்தில் பதிவு செய்ய வேண்டும்
6 மாண்புமிகு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் காதுகேளாத சிறார்களுக்கு காக்குளியர் அறுவை சிகிச்சை (Cochlear Implantation Surgery) 0-5 வயது வரையுள்ள காதுகேளாத சிறார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

 

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பிறப்பு சான்று, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை நகல், தடுப்புசி செலுத்திய அட்டை ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அல்லது CMCHIS மையத்தை அணுகவும்.
7 DAPs / IGNPS திட்டம் வருவாய் துறை மூலம் 40 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு 3 இலட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இ-சேவை மையம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
8 அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் நூறு நாள் அட்டை

 

 

 

வறுமைக்கோட்டு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெயரில் பட்டா இருப்பின் பசுமை வீடு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகலுடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்

 

 

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகலுடன் மாற்றுத்திறனாளிகளின் பெயரில் உள்ள பட்டா நகல்,அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்

9 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஒருமுறை மட்டும் பதிவு செய்தால் போதும். புதுப்பிக்க தேவையில்லை.

பத்தாம் வகுப்பு (தேர்ச்சி / தேர்ச்சியடையாதவர்கள்) – ரூ.600/-

12ஆம் வகுப்பு – ரூ.750/-

இளநிலை படித்தவர்களுக்கு – ரூ.1000/- வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், , UDID அட்டை நகல், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,
10 மகளிர் திட்டம் / தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு  

மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்

 

TNSRLM திட்டத்தின்கீழ், உள்ள இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதி, சுழல்நிதி மற்றும் நலிவுற்றோர் மாற்றுத்திறனாளி நிதி தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வழங்கப்படும்.

 

தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்றுத் தரப்படும்

 

11 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, பள்ளி சேர்க்கை, இடைநிற்றலை தவிர்த்தல், வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் பெற்றுத் தருதல், கல்வி உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்றுத் தருதல்

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனங்கள்

வ.எண் தொண்டு நிறுவனங்களின் பெயர் தொண்டு நிறுவனங்களின் முகவரி செயல்பாடு
1 பாரதமாதா தொண்டு நிறுவனம்
மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான ஆரம்பகால பயிற்சி மையம்
9942227001 மற்றும் 9486605139
97/3, மன்னை ரோடு, திருத்துறைப்புண்டி
திருவாரூர் மாவட்டம்
6 வயது வரையுள்ள மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்
2 பாரதமாதா தொண்டு நிறுவனம்
மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி
9942227001 மற்றும் 9994641378
மணலி,
திருத்துறைப்புண்டி
திருவாரூர் மாவட்டம்
6 வயது முதல் 18 வயது வரையுள்ள மனவளர்ச்சிக்குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி
3 மனோலயம் தொண்டு நிறுவனம்
மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான சிறப்பு பள்ளி
7373819688 மற்றும் 9786808711
தமிழர் தெரு
மேலப்பனங்காட்டாங்குடி,
புதமங்கலம் அஞ்சல்
திருவாரூர் மாவட்டம்
6 வயது முதல் 18 வயது வரையுள்ள மனவளர்ச்சிக்குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி
4 மனோலயம் தொண்டு நிறுவனம்
14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சிக் குன்றியோர்க்கான தொழிறொபயிற்சியுடன் கூடிய இல்லம் (ஆண்கள்)
7373819688 மற்றும் 8838514559
மன்னை மெயின் ரோடு,
குடிதாங்கிச்சேரி,
கூத்தாநல்லூர் தாலுக்கா,,
திருவாரூர் மாவட்டம்
14 வயதுக்கு மேற்பட்டோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லம் (ஆண்கள்)
5 நம்பிக்கை மனநல காப்பகம்
978804976 மற்றும் 9788049706
பவுண்ட்டி தெரு,
நாகை ரோடு,
திருத்துறைப்புண்டி
திருவாரூர் மாவட்டம்
ஆதரவற்ற மனநல பாதிக்கப்பட்டோரை மீட்டல் மற்றும் மனநல காப்பகம்
6 குடந்தை சேவா சங்கம்
காதுகேளாதோருக்கான ஆரம்பகால பயிற்சி மையம்
9443275231 மற்றும் 9942150887
பாவா கோபால்சாமி நகராட்சிப்பள்ளி
முதலியார் தெரு, திருவாரூர்
6 வயது வரையுள்ள காதுகேளாத குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்