மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை
திருவாரூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 12,83,501, 10 வட்டாரங்கள், 430 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு வட்ட மருத்துவ மனைகள் 6, அரசு வட்டம் சாரா மருத்துவமனை ஒன்று, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 34, மேம்படுத்தப்பட்ட கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 10ம், நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் 4 இயங்கி வருகின்றது, கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் 195, நகர துணை சுகாதார நிலையங்கள் 8, நடமாடும் மருத்துவ மனைகள் 10 செயல்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை விவரங்கள்
வ.எண் | அரசு மருத்துவமனைகளின் பெயர் | அமைவிடம் |
---|---|---|
01 | திருவாரூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | திருவாரூர் |
02 | மாவட்ட தலைமை மருத்துவமனை | மன்னார்குடி |
03 | அரசுவட்ட மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி | திருத்துறைப்பூண்டி |
04 | அரசுவட்ட மருத்துவமனை, கூத்தாநல்லூர் | கூத்தாநல்லூர் |
05 | அரசுவட்ட மருத்துவமனை, நன்னிலம் | நன்னிலம் |
06 | அரசுவட்ட மருத்துவமனை, குடவாசல் | குடவாசல் |
07 | அரசுவட்ட மருத்துவமனை, வலங்கைமான் | வலங்கைமான் |
08 | அரசுவட்ட மருத்துவமனை, நீடாமங்கலம் | நீடாமங்கலம் |
09 | தாய் சேய் நல மருத்துவமனை, விஜயபுரம் (வட்டம்சாராமருத்துவமனை) | திருவாரூர் |
10 | மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் (30 படுக்கைகள்) | அடியக்கமங்கலம், பூந்தோட்டம், திருவிழிமிழலை, பெரும்பண்ணையூர், ஆலங்குடி, உள்ளிக்கோட்டை, வடுவூர், திருமக்கோட்டை, சங்கந்திஎடையூர், முத்துப்பேட்டை |
அம்மா குழந்தை நலப்பரிசு பெட்டகம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தை மற்றும் பிரசவித்த தாய்மார்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு அம்மா குழந்தை நலப்பரிசு பெட்டகம் (16 வகைபொருட்கள்) 1. குழந்தைக்கானதுண்டு, 2.குழந்தைக்கானஉடை, 3.குழந்தைக்கான படுக்கை, 4.குழந்தைக்கு பாதுகாப்பு வலை, 5.குழந்தைக்கான நாப்கின், 6.பேபி ஆயில், 7.பேபிசாம்பு, 8.பேபிசோப், 9.சோப்பெட்டி, 10.குழந்தைக்கானநகவெட்டி, 11.குழந்தைக்கானகிலுகிலுப்பை, 12.குழந்தைக்கானபொம்மை, 13.அம்மாவிற்கான கைகழுவும் திரவம், 14.குளியல்சோப்பு, 15.செளபாக்கிய சுண்டிலேகியம், 16.பெட்டகப்பை வழங்கப்படுகிறது.
டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகை
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் குறிப்பாக ஏழை மக்களின் நலனில் மிகுந்த செலுத்தவரும் அரசு, ஏழைகர்ப்பிணிதாய்மார்களுக்குகர்ப்பகாலத்தில் வழங்கப்படும் மகப்பேரு நிதியுதவியை ரூ.6,000/-லுருந்து ரூ.12,000/- ஆக உயர்த்தியுள்ளது. மகப்பேரு நிதியுதவி முதல் 2 பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
நடமாடும் மருத்துவமணை திட்டம்
இத்திட்டம், எளிதில் சென்றடைய முடியாத தொலை தூரப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று மருத்துவ வசதிகளை வழங்கும் நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களில் தேவையான மனிதவளம், ஆய்வக வசதிகள் மற்றும் பிற பரிசோதனைக் கருவிகளுடன் மருத்துவமனைகளாக மேம்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நாளில் முன் பயணத்திட்டத்தில் திட்டமிட்டப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் கிராமம் கிராமமாகச் சென்று சேவை வழங்கப்படுகிறது.
அம்மா ஆரோக்கிய திட்டம்
அம்மா ஆரோக்கிய திட்டம் 30 வயதிற்க்கு மேல் உள்ள ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் இருதய நோய் கண்டறியப்பட்டு, வாரம் தோறும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
ஜனனி சுரக்ஷாயோஜனா
மருத்துவமனைகளில் நிகலும் பிரசவங்களை ஊக்கப்படுத்துதல், தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் ஆகும்.
ஊக்கத்தொகை
• நகர்ப்புற பயனாளிகள் மருத்துவமனைகளில் பிரசவித்தால் ரூ.600/-மட்டும்
• கிராம்ப்புற பயனாளிகள் மருத்துவமனைகளில் பிரசவித்தால் ரூ.700/-மட்டும்
கண்ணொளி காப்போம் திட்டம்
கண்ணொளி காப்போம் திட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு மருத்துவமுகாம் திட்ட நோக்கம்
நோய்கள் வருவதற்கு முன்பேகண்டறிந்து அதற்கான சிகிச்சையினை மேற்க்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இம்முகாம்களின் பெண்கள் நலம், குழந்தைநலம், கண்காது மூக்குதொண்டை, எலும்பு மருத்துவம் போன்ற சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சைஅளிக்கின்றனர்.இம் முகாம்கள் வட்டாரத்திற்கு 3 முகாம் வீதம் வருடந்தோறும் நடத்தப்பட்டுவருகிறது.
பள்ளி சிறார் நலத்திட்டம்
தமிழக அரசின் ஆணைப்படி, பள்ளிசிறார் நலத்திட்டம் திருவாரூர் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு இரண்டு (ஆண்மருத்துவக்குழு, பெண்மருத்துவக்குழு) மருத்துவக்குழுக்கள் வீதம் மொத்தமுள்ள 10 வட்டாரங்களில் 20 மருத்துவக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு மருத்துவக்குழுவிலும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருந்தாளுநர் இருப்பர்.ஒவ்வொரு குழுவிற்கும் வாகன வசதி செய்துதரப்பட்டுள்ளது.
இக்குழு மூலம் பிறந்த குழந்தை முதல் 18 வயதுவரையிலான குழந்தைகளுக்கு மருத்துவபரிசோதனை செய்துசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இக்குழுவினர் மாதாந்திர முன் பயணத்திட்டப்படி வட்டாரத்தில் உள்ள அங்கன் வாடிமையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தி பிறவி குறைபாடுகள், ஊட்டச்சத்து குறைபாடுகள், நோய் அறிகுறிகள் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் கண்டறியப்பட்டு உரியமருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பரிசோதனையின்போது தேவைபடுவோருக்கு மருத்துவக்கல்லூரி போன்ற உயர் மருத்துவ மனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளிலும் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனைகளிலும்(District Early Intervention Centre)மாவட்ட தொடர்புமையம் செயல்பட்டுவருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இம்மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சைஅளிக்க, பேச்சிபயிற்சியாளர், மனநோய் மருத்துவர், கண்மருத்துவர்உள்ளிட்டசிறப்புமருத்துவர்கள்உள்ளனர்.
இரத்ததான முகாம்
ஒவ்வொரு வருடமும் வட்டாரத்திற்கு இரண்டு இரத்ததான முகாம்கள் வீதம் நடத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட இரத்தயூனிட்டுகள் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அளிக்கப்படுகிறது.
வளரிளம் பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் மூலம் 10 முதல் 19 வயது வரையுள்ள வளரிளம் பெண்களுக்கு நாப்கின்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் மாதவிடாய் காலங்களில் வளரிளம் பெண்களின் தன்சுத்தம் பேணப்படுகிறது.
வாராந்திர இரும்புசத்து மாத்திரை வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் மூலம் 10 முதல் 19 வயது வரையுள்ள வளரிளம் குழந்தைகளுக்கு ஒவ்வொருவாரமும் இரும்பு சத்துமாத்திரை பள்ளிகள் மூலமாகவும் அங்கன் வாடிமையங்களின் மூலமாகவும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.இதன் மூலம் வளரிளம் பருவத்தினற்கு ஏற்படும் இரத்த சோகை தடுக்கப்படுகிறது.
தேசிய குடற்புழு நீக்கநாள் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் வருடந்தோறும் இருமுறை வீதம் 1 முதல் 19 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிகள் மூலமாகவும் அங்கன்வாடி மையங்களின் மூலமாகவும் குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் உடல் நலம் மேம்படுகிறது.
வைட்டமின் – ஏ திரவம் வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் வருடந்தோறும் இருமுறை வீதம் 6 முதல் 60 மாதங்கள் வயதுடைய குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ திரவம் வழங்கப்படுகிறது.இதன் மூலம் குழந்தைகளுக்கு மாலைகண் நோய்வராமல் தடுக்கப்பட்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுகிறது.