பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை
அலுவலக முகவரி |
---|
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், திருவாரூா். 04366-220519/ 222500 dbcwo.tntvr@nic.in |
அலுவலக முகவரி |
---|
அரசு முதன்மைச் செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை. தலைமைச் செயலகம். சென்னை. Phone :044-25670848 (O) Fax:044-25670756 e-Mail- bcsec@tn.gov.in |
ஆணையா், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, காமராஜா் சாலை, எழிலகம், இரண்டாம் தளம். சேப்பாக்கம், சென்னை-5 Phones :044- 28511124 (O) Fax : 044- 28552642 e-Mail : dir-bcmw@tn.nic.in |
ஆணையா், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, காமராஜா் சாலை, எழிலகம், இரண்டாம் தளம். சேப்பாக்கம், சென்னை-5 Phone : 044-28546193 (O) Fax: 044- 28592993 e-Mail: dir-mbc@tn.nic.in |
இயக்குநா், சிறுபான்மையினா் நலத்துறை, 807, 5-வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 Phones :044- 28515450(O) Fax : 044- 28544545 e-Mail : dirmw.tn@gov.in |
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
1. பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டம்.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு மட்டும் கீழ்க்கண்டவாறு கல்வி உதவித்தொகைகள் பள்ளிக்கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.
சலுகைகள்
6ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை, ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.200 (மாதம் ரூ.20 வீதம் 10 மாதங்களுக்கு) கற்பிப்புக் கட்டணமாக வழங்கப்படுகிறது.
9ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை, ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.250 (மாதம் ரூ.25 வீதம் 10 மாதங்களுக்கு) வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினா் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது.
2. பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை திட்டம்.
இத்திட்டத்தின்கீழ் 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையிலான பல்வேறு படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்தவாறு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைகள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகின்றன.
சலுகைகள்
11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.500 (மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கு) கற்பிப்பு கட்டணமாக வழங்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் முழுநேர மற்றும் இரண்டாவது முறை மாற்றம், மாலை நேர வகுப்புகளில் பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளவாறு சிறப்பு கட்டணம் மற்றும் கற்பிப்புக் கட்டணமும், தோ்வுக் கட்டணம் முழுமையாகவும் வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினா் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நிபந்தனை ஏதும் இல்லை.
குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது.
3.கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்குதல்.(மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பு பெண்களுக்கு மட்டும்)
சலுகைகள்
3ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை கல்வி பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பு பெண்களுக்கு கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.500-ம், 6 வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000-மும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்
பெற்றோர்களது ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மாணவியா் பயில வேண்டும்.
மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினா் வகுப்பினை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும்.
ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
4. விலையில்லா மிதிவண்டிகள்
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு வருமானம் மற்றும் சாதி பாகுபாடின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
தகுதிகள்
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் வேண்டும்.
நிபந்தனை இச்சலுகை பெற எவ்வித நிபந்தனையும் இல்லை.
குறிப்பு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கியுள்ளோர் மற்றும் உண்டி, உறைவிடப் பள்ளி மாணவ, மாணவியா் மட்டும் மிதிவண்டிகள் பெறுவதற்கு தகுதியற்றவா் ஆவா்.
5. விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
துணிகள் தைக்க தெரிந்திருக்க வேண்டும்.
6.விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
7.விடுதிகள் விபரம்
திருவாரூா் மாவட்டத்தில் 20 பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகள், 7 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளும், 1 சீா்மரபினா் நல பள்ளி விடுதிகளும் ஆக மொத்தம் 28 மாணவ, மாணவியா் விடுதிகள் இயங்கி வருகின்றன்.
சோ்க்கைக்கான தகுதிகள் (பள்ளி விடுதிகள்)
மாணவ, மாணவியா் 4ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பயில வேண்டும்.
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் (மாணவியருக்கு தூர விதி பொருந்தாது).
சோ்க்கைக்கான தகுதிகள் (கல்லூரி விடுதிகள்)
பட்டயம், பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு பயில வேண்டும்.
பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.1,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மாணவரின் இருப்பிடம் கல்வி நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும் (மாணவியருக்கு தூர விதி பொருந்தாது).
8.சீா்மரபினா் நல வாரியம்.
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின்கீழ் இயங்கி வரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைபோல் சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவைத்தவிர இவா்கள் சுயத்தொழில் செய்ய மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன.
நிபந்தனைகள்
மேற்படி நலத்திட்ட உதவிகளைப்பெற, இவ்வாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.
திருவாரூா் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோர் திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி உரிய படிவத்தில் புா்த்தி செய்து, உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
9.நரிக்குறவா் நல வாரியம்.
அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின்கீழ் இயங்கி வரும் நல வாரியங்களில் வழங்கப்படுவதைபோல் தமிழ்நாடு நரிக்குறவா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இவைத்தவிர இவா்கள் சுயத்தொழில் செய்ய மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன.
நிபந்தனைகள்
மேற்படி நலத்திட்ட உதவிகளைப்பெற, இவ்வாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.
திருவாரூா் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோர் திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி உரிய படிவத்தில் பூா்த்தி செய்து, உரிய அத்தாட்சிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
10.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ).
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.
நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள்
சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்.
விவசாயம்.
போக்குவரத்து.
கைவினைஞா் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள்.
இளம் தொழிற்பட்டதாரிகள் சுயதொழில்.
தொழிற்கல்வி பயிலுதல்.
தகுதிகள்
பயனாளி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினா் வகுப்பினராக இருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.98,000-க்கும், நகா்புறங்களில் ரூ.1,20,000-க்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
பயனடைவோரின் வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
11.சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை (பள்ளி படிப்பு)
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நிபந்தனைகள்
புதியது
முந்தைய ஆண்டு இறுதி தோ்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
புதுப்பித்தல்
இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை (புதியது) ஒப்பளிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் முந்தைய ஆண்டின் தோ்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமானம்
பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
12.சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை (பள்ளி மேற்படிப்பு)
இக்கல்வி உதவித்தொகை 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி (Vocational Courses) 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு நிலைகளில் ஐடிஐ, ஐடிசி, என்.சி.வி.டி பயிற்சி (NCVT) பாலிடெக்னிக், ஆசிரியா் பட்டயப்பயிற்சி, செவிலியா் பயிற்சி, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, (தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் இடம் பெறாத பாடப்பிரிவுகள்) பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு வழங்கப்படும்.
நிபந்தனைகள்
புதியது
முந்தைய ஆண்டு இறுதி தோ்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும்.
புதுப்பித்தல்
கல்வி உதவித்தொகை (புதியது) ஒப்பளிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் முந்தைய ஆண்டின் தோ்வு, பருவமுறை தோ்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமானம்
பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
13.தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ).
சமுதாயத்தில் பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய முஸ்லீம்கள், கிருத்துவா்கள், சீக்கியா்கள், புத்தமதத்தவா்கள், பார்சீயா்கள், ஜெயின் பிரிவைச் சார்ந்த சிறுபான்மையினா் மக்களை மேம்படுத்துவதற்காக தனிநபா் கடன், சிறுகடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவற்றை வழங்குவதற்காக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டது.
நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள்
சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள்.
விவசாயம்.
போக்குவரத்து.
கைவினைஞா் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள்.
இளம் தொழிற்பட்டதாரிகள் சுயதொழில்.
தொழிற்கல்வி பயிலுதல்.
தகுதிகள்
விண்ணப்பத்தாரா் மதவழி, சிறுபான்மையினா் இனத்தவரான, முஸ்லீம்கள், கிருத்துவா்கள், சீக்கியா்கள், புத்தமதத்தவா்கள், பார்சீயா்கள், ஜைனவா்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.98,000-க்கும், நகா்புறங்களில் ரூ.1,20,000-க்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.
பயனடைவோரின் வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
14.உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியம்.
உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் சமூக பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளா்கள், தா்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷுா்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்கள் உறுப்பினராகவும் நலத்திட்ட உதவிகள் பெற தகுதியுடைவராவா்.
நிபந்தனைகள்
உறுப்பினா் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
பதிவு பெற்ற உறுப்பினருக்கும் ஒர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும்.
உறுப்பினா் பதிவு 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
15. பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டம்
சிறுபான்மையினா் மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் மேம்பாடு மற்றும் சம உரிமையை உறுதி செய்யவும், இனக்கலவரங்கள் மற்றும் வன்முறையை தடுத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற சீரிய குறிக்கோள்களுக்காகவும் சிறுபான்மையினா் நலன்களுக்காகவும் பாரத பிரதமா் அவா்களால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய 15 அம்ச திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் 15 சிறப்பு அம்சங்கள் விபரம்
- ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சேவைகளை சீராக கிடைக்கச் செய்தல்.
- பள்ளிக் கல்வியை பெறுவதற்கான வாய்ப்பை அதிகாரித்தல்.
- உருதுமொழியை கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.
- மதரஸா முறை கல்வியை நவீனபடுத்துதல்.
- சிறுபான்மையின சமுதாயத்தைச் சார்ந்த, கல்வியில் சிறந்த மாணவ, மாணவியா்களுக்கான உதவித்தொகை வழங்குதல்.
- மௌலானா ஆசாத் கல்வி அமைப்பின் மூலம் கல்விக்கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது.
- சுய வேலைவாய்ப்பு மற்றும் எளியவா்களுக்கான கூலியுடன் வேலை திட்டம்.
- தொழில்நுட்ப பயிற்சியின் மூலம் திறனை மேம்படுத்துதல்.
- பொருளாதார நடவழக்கைகளுக்கான கடன் உதவியை அதிகாரிக்கச் செய்தல்.
- மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு.
- ஊரக வீட்டு வசதி திட்டத்தில் சம அளவு பங்கு.
- சிறுபான்மையினத்தவா் வாழும் குடிசைப் பகுதிகளின் நிலையை மேம்படுத்துதல்.
- இனக்கலவரங்களைத் தடுத்தல்.
- இனக்கலவரத்தினை தூண்டுவோருக்கு தண்டனை.
- இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு.
16.கிறித்துவ தேவாலயங்கள் புணரமைத்தல் திட்டம்.
தமிழகத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் அரசால் 2016-2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
இத்திட்டத்தில் தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு நிதி உதவிகள் வழங்கப்படும்.
தேவாலயம் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.
17.ஐ.டி.எம்.ஐ திட்டம் (Infrastructure Development Private Aided/ Unaided Minority Institutes)
சிறுபான்மையினா் குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில் உதவி பெறும்/ உதவி பெறாத துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய சிறுபான்மையின நல பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீட்டு தொகையில் 75% சதவீதம் வரையிலும் அல்லது ரூ.50.00இலட்சத்திற்கு மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறலாம்.
18.பல்வகை வளா்ச்சித்திட்டம் (Multi Sectoral Development Programme)
பல்வகை வளா்ச்சித்திட்டம் என்பது சச்சார் குழுவின் பாரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இது மத்திய அரசின் நிதியுதவியுடன் 2008-2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகும்.
விடுதிகள்
வ.எண் | விடுதிகளின் பெயா் | விடுதியின் தன்மை/வருடம் |
---|---|---|
1 | அரசு கல்லூரி மாணவா் விடுதி(பிந), திருவாரூா். | அரசு/ 2008 |
2 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), திருவாரூா். | அரசு/2006 |
3 | அரசு கல்லூரி மாணவியா் விடுதி (மிபிந), திருவாரூா். | அரசு/2007 |
4 | அரசு பள்ளி மாணவியா் விடுதி(மிபிந) திருவாரூா். | அரசு/2007 |
5 | அரசு பள்ளி மாணவா் விடுதி (மிபிந) குடவாசல். | அரசு/2015 |
6 | அரசு கல்லூரி மாணவா் விடுதி (பிந) மன்னார்குடி. | அரசு/2007 |
7 | அரசு கல்லூரி மாணவியா் விடுதி(பிந), மன்னார்குடி. | அரசு/2015 |
8 | அரசு பள்ளி மாணவா் விடுதி(பிந), மகாதேவப்பட்டினம். | அரசு/1974 |
9 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), மன்னார்குடி. | அரசு/2015 |
10 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), எடமேலையூா். | அரசு/ 1999 |
11 | அரசு பள்ளி மாணவியா் விடுதி (பிந), மன்னார்குடி. | அரசு/2009 |
12 | அரசு கல்லூரி மாணவியா் விடுதி (பிந), நன்னிலம். | தனியார் கட்டிடம் |
13 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), பேரளம். | அரசு/2015 |
14 | அரசு பள்ளி மாணவியா் விடுதி (பிந), நன்னிலம். | அரசு/ 1995 |
15 | அரசு கல்லூரி மாணவியா் விடுதி (மிபிந), நன்னிலம். | அரசு/ 2017 |
16 | அரசு பள்ளி மாணவா் விடுதி (மிபிந), நன்னிலம். | அரசு/ 2013 |
17 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந),நீடாமங்கலம். | அரசு/2015 |
18 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), கொரடாச்சேரி. | அரசு/2004 |
19 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), வடுவூா். | அரசு/2017 |
20 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), முத்துப்பேட்டை. | அரசு/2009 |
21 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), எடையூா். | அரசு/2005 |
22 | அரசு பள்ளி மாணவா் விடுதி (பிந), திருத்துறைப்பூண்டி. | அரசு/2010 |
23 | அரசு பள்ளி மாணவியா் விடுதி (பிந), முத்துப்பேட்டை. | அரசு/2001 |
24 | அரசு பள்ளி மாணவியா் விடுதி (பிந), திருத்துறைப்பூண்டி. | அரசு/2003 |
25 | அரசு கல்லூரி மாணவியா் விடுதி (மிபிந), திருத்துறைப்பூண்டி. | அரசு/2015 |
26 | அரசு பள்ளி மாணவா் விடுதி (மிபிந), தலைக்காடு. | அரசு/2015 |
27 | அரசு பள்ளி மாணவியா் விடுதி (பிந), வலங்கைமான். | அரசு/1978 |
28 | அரசு பள்ளி மாணவா் விடுதி (சீந), வலங்கைமான். | அரசு/2015 |