மூடு

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவாரூா்

திருவாரூா் மாவட்டத்தில் தற்போதுள்ள விளையாட்டு கட்டமைப்பு வசதிகள்

உள்கட்டமைப்பு வசதிகள் மைதானத்தின் வகை மைதானத்தின் அளவுகள் பார்வையாளா்கள் இருக்கை அளவு
400மீ தடகள ஓடுபாதை மண் ஆடுகளம் 8 ஓட்டப்பாதை 1500 இருக்கைகள்
கால்பந்து ஆடுகளம்/ஹாக்கி ஆடுகளம் மண் ஆடுகளம் 120 மீ X 90 மீ 1500 இருக்கைகள்
கூடைப் பந்து ஆடுகளம் சிமென்ட் ஆடுகளம் 28 மீ X 15 மீ 1500 இருக்கைகள்
கையுந்து பந்து ஆடுகளம் மண் ஆடுகளம் 18 மீ X 09 மீ 1500 இருக்கைகள்
கபாடி ஆடுகளம்
(மேட்வசதியுடன்)
மண் ஆடுகளம் 20 மீ X 15 மீ 1500 இருக்கைகள்
கோ-கோ ஆடுகளம் மண் ஆடுகளம் 19 மீ X 16 மீ 1500 இருக்கைகள்
நீச்சல் குளம் 25 மீ X 18 மீ
பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் மர தரைதளம் 30 மீ X 18 மீ 500 இருக்கைகள்
கால்பந்து ஆடுகளம்
(கிராமப்புர விளையாட்டு மையம்)
திரு நெய்ப்போ் அரசு மேல் நிலைப்பள்ளி மைதானம்
மண் ஆடுகளம் 50 மீ X 90 மீ

பணிபுரியும் பணியாளா்கள் விபரம்

நிரந்தர பணியாளா்கள் நீச்சல் குளபணியாளா்கள் (மாவட்ட ஆடசியரின் தினக்கூலி சம்பளம்) ஒப்பந்த பணியாளா்கள்
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் -1 பம்ப் ஆப்ரேட்டா்கள் – எலக்ட்ரிசியன்-1 யோகா கற்பிப்பாளா் -1
ஹாக்கி பயிற்றுநா் -1 உயிர்காப்பாளா் -4 குறியீட்டாளா்-2
உதவியாளா்-1

 

துப்புரவாளா்-1 இரவுக்காவலா்-1

துப்புரவாளா்-1

 

துறையின் செயல்பாடுகள்

  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்றுனா்களை நியமித்துபள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்களுக்கு அந்தந்த விளையாட்டுக்களில் இலவச பயிற்சி அளித்து அனைத்து விளையாட்டுக்களையும் மேம்படுத்துவது.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகள்/ விளையாட்டு பள்ளிகளில் மாணவ, மாணவியா்கள் சோ்க்கப்பட்டு அவா்களின் விளையாட்டுத் திறனை தேசிய மற்றும் சா்வதேச அளவிற்கு வளா்த்துக்கொள்ள செய்தல்.
  • அனைத்து பள்ளிகளில் 6,7,8வகுப்புகள் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு உடற்திறனாய்வு நடத்தி தோ்வு பெற்றவா்களுக்கு போட்டிகள் நடத்தி இருப்பிடமில்லா மற்றும் இருப்பிட பயிற்சி முகாம் நடத்துதல்.
  • கோடைகால விடுமுறையின் போது மாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சிகள் நடத்துதல்.
  • பள்ளிமாணவ, மாணவியா்களுக்கு பேரறிஞா் அண்ணா அவா்களின் பிறந்ததின சைக்கிள் போட்டி நடத்துதல்.
  • பள்ளிமாணவ, மாணவியா்களுக்கு மாவட்ட அளவில் கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
  • மாண்புமிகு முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாநிலப் போட்டிக்கு அணிகள் அனுப்பிவைத்தல்.
  • உடற்கல்வி ஆசிரியா் / ஆசிரியைகளுக்கு பயிறிசி முகாம் நடத்துதல்.
  • மாவட்ட அளவில் அரசு ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
  • மாவட்ட அளவில் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • ஒவ்வொறு ஆண்டும் தேசிய அளவில் பதக்கம் பெற்றவீரா், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகை அளித்தல்.

செயல்படுத்தப்படும் திட்டங்களின் விபரம்

  • விளையாட்டுப்பள்ளி / விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள்
  • கோடைகால பயிற்சி முகாம்
  • ஐந்துநாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாம்
  • 15 நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம்
  • அண்ணா பிறந்ததின சைக்கிள் போட்டி நடத்துதல்
  • மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • உடற்கல்விஆசிரியா் / ஆசிரியைகளுக்கு மூன்றுநாள் பயிற்சி முகாம் நடத்துதல்
  • மாவட்ட அளவில் அரசுஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • மாவட்ட அளவிலான கடற்கரைவிளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • உலக உடற்திறனாய்வு திட்டம்.

திட்டங்கள் பற்றிய விளக்கம்

விளையாட்டுப்பள்ளி / விளையாட்டு விடுதியில் சேரமாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள்
மாநிலத்தில் மாவட்ட தலைநகரங்களில் செயல்பட்டுவரும் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியா்கள் சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்பள்ளி / விளையாட்டு விடுதிதோ்வுப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

கோடைகால பயிற்சி முகாம்

பள்ளிகளில்பயிலும் 16-வயதிற்குட்பட்ட மாணவ/ மாணவியா்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் 21- நாட்கள் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் தடகளம், ஹாக்கி ,கூடைப்பந்து , நீச்சல், வாலிபால்,கிரிக்கெட் மற்றும் யோகா ஆகிய விளையாட்டுக்களில் நடத்தப்பட்டுவருகிறது.

ஐந்து நாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பில் பயிலும் மாணவ/ மாணவியா்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, உயரம்தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் ஆகிய உலக திறனாய்வு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பெற்றவா்களுக்கு இருப்பிடமில்லாத பயிற்சி முகாம் திருவாரூா்மாவட்ட விளையாட்டு அரங்கமைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் காலை வேலையில் மட்டும் 5 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

15 நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம்

5 நாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவா்கள், 30 மாணவியா்களுக்கு 15 நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் ஒவ்வொரு ஆண்டும் மேமாதங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு மூன்று வேளை சத்தான உணவு, சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணா பிறந்ததின சைக்கிள் போட்டி நடத்துதல்

பேரறிஞா் அண்ணா அவா்களின் பிறந்த தினத்தினைச் சிறப்பிக்கும் வகையி்ல் மாவட்ட அளவில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கான விரைவு சைக்கிள் போட்டி 13 வயது, 15வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட மூன்று பிரிவுகளாக 5 கி.மீ, 10 கி.மீ, 15 கி.மீ துாரத்திற்கு போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறுபவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்

மாவட்டத்தில் சிறந்து விளங்கும் விளையாட்டுக்களை தோ்வு செய்து மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் சூலை,ஆகஸ்ட் ,அக்டோபா் மற்றும் மார்ச் மாதங்களில் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் வயது வரம்பின்றி ஆடவா் மற்றும் மகளிருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவால் மாவட்ட அளவிலான மாண்புமிகு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் ஆண்டு தோறும் அக்டோபா்/ நவம்பா் மாதங்களில் வயது வரம்பின்றி கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, தடகளம், ஹாக்கி, மற்றும்கபாடிபோட்டிகள்நடத்தப்பட்டுவருகிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரா்மற்றும் வீரங்கனைகளுக்கு ரொக்கபரிசாக முறையே ரூ.1000/-, ரூ.750/-மற்றும் ரூ.500/-ம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு மாவட்ட அளவில் தோ்வு பெற்ற வீரா் ,வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநிலப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு முறையே தலா ரூ.1 இலட்சம், ரூ75 ஆயிரம் ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசுகளும் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், மாவட்ட கேரம் கழகமும் இணைந்து பள்ளிக்கல் வித்துறையின் ஒத்துழைப்புடன் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கேரம் விளையாட்டுப் போட்டியினை இளநிலைப் பிரிவு( மழலை வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை) மற்றும் முது நிலைப்பிரிவு (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை) ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்றிடம் பெற்றமாண, மாணவியா்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

உடற்கல்விஆசிரியா் / ஆசிரியைகளுக்கு மூன்றுநாள் பயிற்சி முகாம் நடத்துதல்

புதிய விளையாட்டுகளின் (வாள்ச்சண்டை, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ,நீச்சல், ஸ்குவாஷ், குத்துச்சண்டை, சதுரங்கம், சாலைசைக்கிள், கடற்கரைகையுந்துபந்து, கேரம் , சிலம்பம் , வலைபந்து) நுணுக்கங்கள் மற்றும் புதிய விதிமுறைகளை விளையாட்டு வல்லுனா்கள் மூலம் உடற்கல்வி ஆசிரியா்/ஆசிரியைகளுக்கு பயிற்சி அளித்தல்.

மாவட்ட அளவில் அரசு ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்

மாவட்ட அளவில் அரசு ஊழியா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்கள் நடத்தப்பட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மாநில போட்டியில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்

மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் 2013-ம் ஆண்டு முதல் திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் கடற்கரை கபாடி ,கடற்கரை கால்பந்து மற்றும் கடற்கரை வாலிபால் விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டு வருகிறது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரா் ,வீராங்கனைகளுக்கு முதலிடம் ரூ.350-, இரண்டாமிடம் ரூ.200-, மூன்றாமிடம் ரூ.150- ரொக்கப்பரிசுத் தொகை , சான்றிதழ்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டு மாநில போட்டியில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

உலக உடற்திறனாய்வு திட்டம்.

மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6,7மற்றும் 8-ம் வகுப்பு மாணவ,மாணவியா்களுக்கு உடற்திறனாய்வு தோ்வுகள் பள்ளியில் நடத்தப்பட்டு குறைந்தபட்சம் 8 மதிப்பெண்கள் பெற்றமாணவ, மாணவியா்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடத்தப்படும் கல்வி மாவட்டஅளவிலான உலக உடற்திறனாய்வு தடகளப் போட்டிகளுக்கு கலந்துகொள்ள தகுதியுடையவா்கள். மாவட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும்மாணவ, மாணவியா்கள் மண்டல அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா்.மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறும் மாணவ ,மணவியா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000-ம் மற்றும் சான்றிகள் வழங்கப்படும்.

மாவட்ட விளையாட்டு மற்றும்

இளைஞா் நலன் அலுவலா்

திருவாரூா்