மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் முக்கியமான பங்கு வகிக்கின்றது. மாவட்ட ஆட்சியர் இந்திய ஆட்சிப்பணி நிலையில் மாவட்டத்திற்கு தலைமை வகிக்கின்றார். அவரது அதிகாரத்திற்குட்பட்ட எல்லைக்குள் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் மாவட்ட நீதிபதியாக செயல்படுகிறார். அவர் முக்கியமாக, திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி, பொதுத்தோ்தல்கள், ஆயுத உரிமங்கள் போன்றவற்றை கையாளுகின்றார்.
கூடுதல் ஆட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் பல்வேறு அடிப்படையில் வருவாய் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். மேலும் அவர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக செயல்படுகிறார். அவர் முக்கியமாக குடிமைப்பொருள் வழங்கல், நிலம் தொடர்பான விவகாரங்கள், சுரங்கம் மற்றும் தாதுக்கள், கிராம அலுவலர்கள் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.
மாவட்ட ஆட்சியர் அவரது பணியினை ஆற்றுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்கள் உதவி புரிகின்றனர்.
திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இந்திய ஆட்சிப்பணி / மாவட்ட வருவாய் அலுவலர் பணி நிலையிலும், தனி உதவியாளர் துணை ஆட்சியர் பணி நிலையிலும், உதவி இயக்குநர் (நகர பஞ்சாயத்துக்கள்), நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி ஆணையர்கள் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உதவி செய்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவுகளும்

  • பிரிவு அ : பணியாளர் கட்டமைப்பு மற்றும் அலுவலக நடைமுறைகள்
  • பிரிவு ஆ : பட்டா மேல்முறையீடு, ஆக்கரமணம், பயிராய்வு,
    மத்தியஸ்தம்(arbitration)
  • பிரிவு இ : சட்டம் மற்றும் ஒழுங்கு
  • பிரிவு ஈ : பணியாளர் ஊதியம், ஓய்வூதியம், வீடு கட்ட முன்பணம்.
  • பிரிவு உ : கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், வாரிசு சான்று
    மேல்முறையீடு, காசநோய் வில்லை.
  • பிரிவு ஊ : நிலஎடுப்பு, நிலமாற்றம், நிலஉரிமை மாற்றம், குத்தகை, சந்தை மதிப்பு
    நிர்ணயம், மாவட்ட பெருந்திட்ட வளாகம்.
  • பிரிவு எ : சமூக பாதுகாப்பு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம்.
  • பிரிவு ஏ : ஜமாபந்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
  • பிரிவு ஐ : பிற்பட்டோர் நலத்துறை.
  • பிரிவு கே : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.