மூடு

வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் திருவாரூா்

திருவாரூா் வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் சொந்த கட்டிடத்தில் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அவா்களின் பெருந்திட்ட வளாகத்தின் அருகில் ஓட்டுநா் தோ்வு தள வசதிகளுடன் இயங்கி வருகிறது. இவ்வலுவலக நிர்வாகத்தின் கீழ், கீழ்காணும் தாலுக்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

 1. திருவாரூா்
 2. குடவாசல்
 3. நன்னிலம்

திருவாரூா் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இரண்டு பகுதி அலுவலகங்கள் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. பகுதி அலுவலகத்தின் கீழ் செயல்படும் தாலுக்கா விபரங்கள் பின்வருமாறு.

மன்னார்குடி

 1. மன்னார்குடி
 2. நீடாமங்கலம்
 3. கூத்தாநல்லூா்
 4. வலங்கைமான் (கும்பகோணம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது)

திருத்துறைப்பூண்டி

 1. திருத்துறைப்பூண்டி

இத்துறை முலம் மேற்கொள்ளப்படும் பணிகள்

 1. ஓட்டுநா் உரிமம் வழங்குதல்
 2. நடத்துநா் உரிமம் வழங்குதல்
 3. பன்னாட்டு உரிமம் வழங்குதல்
 4. வாகனங்களுக்கு பதிய அனுமதிச் சீட்டு வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்
 5. புதிய வாகன பதிவு
 6. தகுதிச் சான்று வழங்குதல்
 7. மோட்டார் வாகன வரி கட்டணம் மற்றும் அபராதம் வசூலித்தல்
 8. வாகன தணிக்கை
 9. விபத்து வாகனங்களை ஆய்வு செய்தல்
 10. சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்துதல்
 11. இயற்கை சீற்றங்களின் நோ்வுகளில் வாகன வசதிகள் ஏற்படுத்தி உயிர்களையும் பொருள்களையும் மீட்டல்.
  வட்டாரப்போக்குவரத்து அலுவலக பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அனைத்து படிவங்கள், விண்ணப்பதாரா் தகுதிகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், யாருக்கு விண்ணப்பிப்பது போன்ற விபரங்களை www.tn.gov.in வலைதளத்தில் மக்கள் சாசனம் தலைப்பின் கீழ் அனைத்து விபரங்களை பெறலாம்.
  அத்துடன் அனைத்து பணிகளுக்கும் ஆதார் அட்டையினை விலாச சான்றாக வயது சான்றாக இணைக்கலாம்.

போக்குவரத்து துறை வலைதள விபரங்கள்

 1. பொது வலைதளம் : www.tn.gov.in/sta
 2. இ-சேவை : http://transport.tn.nic.in/transport
 3. ஓட்டுநா் உரிமம் தொடா்பான பணிகள்: www.parivahan.gov.in

மின்னஞ்சல் முகவரிகள்

 1. மாநில போக்குவரத்து அதிகாரி : sta.tn@nic.in
 2. துணை போக்குவரத்து ஆணையா் : dtctnj@nic.in
 3. வட்டாரப்போக்குவரத்து அலுவலா் : rtotn50@nic.in
 4. மன்னார்குடி பகுதி அலுவலகம் : rtotn50z@nic.in
 5. திருத்துறைப்பூண்டி பகுதி அலுவலகம் :rtotn50y@nic.in

தொலைபேசி எண்கள்

 1. சென்னை போக்குவரத்து ஆணையா் : 044-28520682
 2. தஞசாவூா் துணை போக்குவரத்து ஆணையா் : 04362-232299
 3. திருவாரூா் வட்டாரப்போக்குவரத்து அலுவலா் : 04366-221261
 4. மன்னார்குடி பகுதி அலுவலகம் : 04367-227127
 5. திருத்துறைப்பூண்டி பகுதி அலுவலகம் : 04369-221200

வட்டாரப்போக்குவரத்து அலுவலா்

திருவாரூா்