மூடு

முன்னாள் படைவீரர் நலத்துறை

மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் அறை எண்.201-204ல் இயங்கிவருகிறது. இவ்வலுவலகம் மாவட்ட முப்படைவீரர் வாரியம் என்றும் அழைக்கப்படும். இம்முப்படைவீரர் வாரியத்திற்கு உதவி இயக்குநர் செயலாளராகவும், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதுநிலை படை அலுவலர் ஒருவர் துணை தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது. இவ்வலுவலக தொலைபேசி எண்.04366 – 220 210 மற்றும் மின்னஞ்சல் முகவரி exweltvr@tn.gov.in ஆகும்.

திருவாரூர் மாவட்டத்தில் கீழ்கண்ட எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர் / விதவையர்கள் வசிக்கின்றனர்.

வ.எண் விவரங்கள் தகவல்கள்
01 முன்னாள் படைவீரர் 1430
02 விதவையர் 557
03 போர் விதவையர் 02
04 போரில் ஊனமுற்றோர் 05

போர் விதவை / போரில் ஊனமுற்றோர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியன எண்.22, ராஜா முத்தையா சாலை, சென்னை-03ல் உள்ள இத்துறை தலைமை அலுவலகத்தின் ஆணைகள் / அறிவுரைகளின்படி செயல்படுத்தப்படுகிறது. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வெளிவரும் முன்னாள் படைவீரர்களுக்காக இவ்வலுவலகத்தின் மூலம் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவும் செயல்படுகிறது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஏற்படும் காலியிடங்களில் முன்னாள் படைவீரர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், இவ்வலுவலகம் மூலம் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர் நலம் பேணும் மறுவாழ்வுத் திட்டங்கள் / சுயதொழில் வேலைவாய்ப்புகள் / நிதி உதவிகள் / மானியங்கள் மற்றும் பல்வேறு பணப்பயன்கள் வழங்கப்படுகின்றன. மத்திய / மாநில அரசுகள் மூலம்

மின் ஆளூமை திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர் குறித்தான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு, விவரங்கள் esmwel.tn.gov.in என்ற இணையவழி ஒருங்கிணைக்கப்பட்டுவருகிறது.

இத்துறையின் செயல்பாடுகள் மற்றும் முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தான மேலும் விவரங்களை கீழ்காணும் இணைய முகவரியில் அறியலாம்.

  1. http://esmwel.tn.gov.in/core/online/de/services1.php
  2. http://esmwel.tn.gov.in/core/online/de/services2.php
  3. http://esmwel.tn.gov.in/core/online/de/services7.php
  4. http://esmwel.tn.gov.in/core/online/de/services8.php
  5. http://esmwel.tn.gov.in/core/online/de/services10.php

 

உதவி இயக்குநர்,

முன்னாள் படைவீரர் நலன்,

திருவாரூர் – 610 004.