மூடு

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

முன்னுரை

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகமானது தலைமைச் செயலக அளவில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டிலும், மாநில அளவில் சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களின் கட்டுப்பாட்டிலும் இயங்குகிறது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கனிவான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து மறுவாழ்வு பணிகளும் அரசு உத்தரவுகளின்படி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.

துறையின் நோக்கமும் குறிக்கோள்களும்

மாற்றுத் திறனாளிகள் தங்களின் இலக்கை அடைவதற்கு நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மருத்துவம், உளவியல், கல்வி, தொழில் மற்றும் சமூக பொருளாதார உதவிகள் செய்து, மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் முழுமையான மறுவாழ்வு அல்லது ஒருங்கிணைந்த மறுவாழ்வு அளிக்கும் வகையில் நலத்திட்ட மற்றும் மறுவாழ்வு உதவிகளை செய்து மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் உரிய வாய்ப்புகளை அவர்கள் பெற்று பயனடையுமாறு பணிபுரிவதே இத்துறையின் நோக்கமாகும். மாற்றுத் திறனாளிகள் தங்களிடம் உள்ள தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் தனச்சிறப்பு மிக்க அவர்களது திறமைகளை உணரும்படி விழிப்பூட்டி, ஊனத்தால் ஏற்பட்டுள்ள தடைகளை தகர்த்தெரிய அறிவுறுத்துவதோடு, வாழ்க்கையில் முன்னேருவதற்கு துறை மூலமாக உதவி புரிதல்.

ஊனத்தின் வகைப்பாடுகள்

மாற்றுத் திறனாளிகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 1. கை/கால் பாதிக்கப்பட்டோர் (Orthopaaedically Handicapped – OH)
 2. மூளை முடக்கு வாத2. மூளை முடக்கு வாதம் (Cerebral Palsy – CP)
 3. மனவளர்ச்சிக் குன்றியோர் (Mentally Retarded – MR)
 4. மூளை முடக்கு வாத பாதிப்பு மற்றும் மனவளர்ச்சிக் குன்றியோர் (Cerebral Palsy with Mental Retardation – CP with MR)
 5. மனநலம் பாதிக்கப்பட்டோர் (Mentally Ill – MI)
 6. காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் (Hearing Impaired – HI)
 7. கண் பார்வையற்றோர் (Visually Impaired – VI)
 8. குறைந்த கண் பார்வையுடையோர் (Low Vision – LV)
 9. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் (Spinal Cord injured)
 10. தொழநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் (Leprosy Cured – LC)
 11. புற உலக சிந்தனை இல்லாதவர் (Autism – Au)

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
மாற்றுத் திறனாளிகள் வயது,சதவீதத்தை பொருத்து பல்வகையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளை பெறுவதற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை இன்றியமையாததாகும். குறைந்தபட்சம் 40 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 100 சதவீதம் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான சான்று மாற்றுத் திறனாளிகளின் ஓனத்திற்கு ஏற்ப சம்மந்தப்பட்ட அரசு சிறப்பு மருத்துவரால் (முடநீக்கு இயல் மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்குத் தொண்டை மருத்துவர், கண் மருத்துவர்) வழங்கப்படவேண்டும். அதனடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையானது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் சம்மந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு இத்துறையினால் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையானது மிகவும் இன்றியமையாததாகும்.

அலுவலக அமைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள்

(UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES)

வ.எண் திட்ட விவரங்கள் தகுதி தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பம்
01 மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை மத்திய அரசால் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016இல் அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று, ஜாதி சான்று, கையொப்பம் / கைவிரல் ரேகை இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்
www.sawvlambancard.gov.in
02 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 40 சதவீத்த்திற்கு மேல் பாதிக்கப்ட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. (பார்வையற்றவர்கள், கை,கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆட்டிசம், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டோர்) குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 3 கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் – அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று கண் பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவரிடம் சான்று

காது கேளாதவர் மற்றும் வாய் பேசாதவர் – அரசு காது, முக்கு, தொண்டை மருத்துவர் சான்று

மனவளர்ச்சி குன்றியவர் – 12 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று

12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று

மனநலம் பாதிக்கப்பட்டவர் – அரசு மனநல மருத்துவரிடம் சான்று

பல்வகை மாற்றுத்திறனாளிகள் 3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
03 முன்று சக்கர சைக்கிள் இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்ககூடிய நிலையில் இருத்தல் வேண்டும் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
04 சக்கர நாற்காலி இரண்டு கால்களும் கைகளும் செயல் இழந்தவராக இருத்தல் வேண்டும் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
05 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டார் 1) 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணபுரிபவாக்ளாக இருக்க வேண்டும்.
2) இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்ககூடிய நிலையில் இருத்தல் வேண்டும்
விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
06 காதொலி கருவி செவித்திறன் குறைபாடுடையவர்கள் 3 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், காது பரிசோதனை சான்று (Audiogram) திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
07 காதுக்கு பின் அணியும் காதொலி கருவி 6ம் வகுப்புக்கு மேல் கல்வி பயில்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் 11 வயது மதல் 70 வயது வரை உடையவர்கள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், காது பரிசோதனை சான்று (Audiogram) திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
08 பார்வையற்றோருக்கான நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 12 வயது முதல் 70 வயது வரை உடையவர்கள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
09 பார்வையற்றோருக்கான பரெய்லி கடிகாரம் பணிபுரிபவராகவோ அல்லது பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பவராகவோ இருத்தல் வேண்டும் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
10 முடநீக்கு சாதனம் இளம்பிள்ளை வாதம் அல்லது முளைமுடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
11 ஊன்றுகோல் கால்கள் பாத்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
12  செயற்கை அவயம்  விபத்து மற்றும் நோயினால் கால் துண்டிக்கப்பட்டவர்கள்  விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்  திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
13 நவீன செயற்கை அவயம் விபத்து மற்றும் நோயினால் கால் துண்டிக்கப்பட்டவர்கள் பணிபுரிபவராகவோ அல்லது படிப்பவராகவோ இருத்தல் வேண்டும் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
14 மனவளர்ச்சி குன்றியோர்க்கான பராமரிப்பு உதவித்தொகை 40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறாதவர் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
15 கடும் ஊனத்தால் பாதக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை 40 விழுக்காடுக்கு மேல் கடும் ஊனத்தால் பாதக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறாதவர் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
16 தசை சிதைவு நோயால் பாதக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை 40 விழுக்காடுக்கு மேல் தசை சிதைவு நோயால் பாதக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறாதவர் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
17 தொழுநோயால் பாதக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை தொழுநோயால் பாதக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறாதவர் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
18 மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்,
திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்க கூடாது.
18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்,
விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்ற சான்று, வங்கி மற்றும் அஞ்சலக இணை சேமிப்பு வங்கி கணக்கு, ரொக்கம் ரூபாய் 12500 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 12500 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.

19 பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தம்பதியரில் ஒருவர் பட்டயம் / பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும், முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்,
திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்க கூடாது.
18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்
விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்ற சான்று, பட்டயம் / பட்டதாரி சான்று, வங்கி மற்றும் அஞ்சலக இணை சேமிப்பு வங்கி கணக்கு, ரொக்கம் ரூபாய் 25000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 25000 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.

20  மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை  பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்.  விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் – 3, பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து சன்று, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சன்று வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை இலவச பேருந்து பயணச்சலுகை

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.

21 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை பார்வையற்றவர் என தேசிய அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் – 3 மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து பயணச்சலுகை

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.

22 அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும். மருத்துவரிடம் துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட மருத்துவ சான்று நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.

23 . மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை ரூ,1000
6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ,3000
விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
24 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, ஐ.டி,ஐ பயில்பவர்கள், பட்டய படிப்பு, கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள் மற்றும் மருத்துவ கல்வி பயில்பவர்கள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று 9 முதல் 12ம் வகுப்பு வரை ரூ,4000
பட்டயம் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு ரூ,6000
முதுகலை பட்டப்படிப்பு ரூ,7000விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.
25 மத்திய அரசின் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
(இணையதளம் முலம் விண்ணப்பிக்க வேண்டும்)
முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம் வகுப்பிற்குமேல் படிப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கஙள் இணையதளத்தின் முலம் பரிந்துரைக்க வேண்டும்.
www.scholarships.gov.in
26 சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் பார்வையற்றவர்கள், கை கால்கள், பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு, ரூ.50000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும், முன்றில் ஒரு பங்கு (அ) அதிகபட்சம் ரூ,10,000 மானியம் வழங்கப்படும்.

விண்ணப்பம் பெற திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம்.

27 தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் முலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம், ஜாமீன்தாரரிடம் இருந்து கூட்டுறவு சங்கங்க்ளின் உறுப்பினர் சான்று

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மற்றும் அருகாமையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், கிராம/நகர கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ.25,000க்குள் கடனுதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன் ரூ,50,000 க்குள் கடனுதவி பெறுபவர்கள் 2 நபர் ஜாமீன். அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும், தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும்.
28 பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் வங்கி கடன் PMEGP LOAN
(இணையதளம் முலம் விண்ணப்பிக்க வேண்டும்)
வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. இணையதளம் முலம் விண்ணப்பித்த விண்ணப்பித்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,, திட்ட அறிக்கை புகைப்படம் ஆகியவற்றை பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், திருவாருர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். ரூ.25000 முதல் ரூ.25 இலட்சம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக கிராமப்புற மாற்றுத் திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும் நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
29 . படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN
(இணையதளம் முலம் விண்ணப்பிக்க வேண்டும்)
8ம் வகுப்பு தேர்ச்சி வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் 45 வயது வரை இணையதளம் முலம் விண்ணப்பித்த விண்ணப்பித்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,, திட்ட அறிக்கை புகைப்படம் ஆகியவற்றை பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், திருவாருர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படகிறது. மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
30 மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள், 14 வயதுக்கு மேல் 45 வயது வரை
தையல் பயிற்சி முடித்தவர்கள்
விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று விண்ணப்பம்