மூடு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

தாட்கோ வரலாறு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் 1974ம் ஆண்டு ஆதிதிராவிடர்கள் குடியிருப்பதற்கான வீடுகளைக் கட்டுவதற்காக நிறுவன சட்டம் 1956-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1980ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

ஆதிதிராவிடாகளுக்காக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துதல், ஆதிதிரவிட மக்களின் தேவைக்கேற்ப பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்து தாட்கோ மானியம் மற்றும் வங்கி கடன் உதவியுடன் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாருர் மாவட்டத்தில் 2000 ஆண்டில் தாட்கோ நிறுவனம் துவங்கப்பட்டது.

தாட்கோ திட்டங்கள்

மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம் (Land Purchase Scheme):

நிலம் வாங்குதல்:

வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலம் விண்ணப்பதாரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட நிலத்தினை விண்ணப்பதாரர் 20 வருடங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் கடந்த 5 ஆண்டுகளில் சொந்தமாக நிலம் வைத்திருந்து அதனை எவருக்கும் மாற்றியோ விற்பனையோ செய்திருக்கக் கூடாது.

தகுதிகள்:

ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மகளிராக இருக்க வேண்டும். வயது 18-க்கு மேலும் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.

வாங்கும் நிலத்தின் அளவு:

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் மதிப்பு அரசின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி (Guideline Value) நிர்ணயிக்கப்படும். இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) இருக்கும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் (அ) வட்டாட்சியா கையொப்பமிட்ட இருப்பிடச் சான்று, வாங்கவுள்ள நிலத்தின் புல எண், சிட்டா, அடங்கல், வரைபடம் மற்றும் நில ஆவணம், நிலத்தை விற்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையிலான ஒப்பந்த பத்திரம், வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 25 ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்று அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை, திட்ட அறிக்கை.

நிலம் மேம்பாட்டுத் திட்டம் (Land Development Scheme):

நிலம் மேம்பாடு செய்வதற்கு நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். நிலம் மேம்பாடு செய்வதற்கு அந்தந்த மாவட்டங்களில் நபார்டு வழி காட்டுதலின்பழ கிணறு தோண்டுதல் மற்றும் ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு விண்ணப்பதாரரின் நிலத்தில் போதிய நீர் ஆதாரம் உள்ளது என்பதற்கான புவியியல் வல்லுநரின் (Geologist) சான்று பெறப்பட வேண்டும்.

மான்ய விவரம் – திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் முறை – மாவட்ட மேலாளர் தலைமையிலான தேர்வு குழுவினரால் விண்ணப்பதாராகள் தோவு செய்யப்படுவார்கள்.

தொழில் முனைவோர் திட்டம் (Enterpreneur Development Programme):

தகுதிகள்:

ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18-க்கு மேலும் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கடன் மற்றும் மானியம் கோரும் தொழிலில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.

நிபந்தனைகள் :

துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் (அ) வட்டாட்சியர் கையொப்பமிட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி டின் எண்ணுடன் (Quotation with TIN No.) ஓட்டுநா உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகனக் கடனுக்கு மட்டும்) முன் அனுபவச் சான்று, திட்ட அறிக்கை மாவட்ட மேலாளா மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள்

இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம் (SEPY):

ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது 18-க்கு மேலும் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கடன் மற்றும் மானியம் கோரும் தொழிலில் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது. தாட்கோ, மாநில அல்லது மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களின் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

செபி திட்டத்தில் இளம் மருத்துவர்கள் கிளினிக் அமைத்தல் :

இத்திட்டத்தில் மருத்துவமனை அமைப்பதற்கு எம்.பி.பி.எஸ்., பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தியன் மெடிக்கல் கவுன்சிலிங்லில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நிபந்தனைகள் – துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் (அ) வட்டாட்சியர் கையொப்பமிட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி டின் எண்ணுடன் (Quotation with TIN No.) ஓட்டுநா உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகனக் கடனுக்கு மட்டும்) முன் அனுபவச் சான்று, திட்ட அறிக்கை மாவட்ட மேலாளா மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவித் திட்டம் (Revolging Fund & Economic Activities):

ஆதிதிராவிட மகளிர் தங்களுக்குள்ள தனித் திறமைகளை வெளிக் கொணர்ந்து ஒரு குழுவாக இணைந்து தங்களுக்கு தெரிந்த தொழில் புரிந்து வருமானம் ஈட்டி சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் முன்னேறுவது திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழுவிற்கும் சுழல் நிதி மற்றும் பொருளாதாரக் கடன் ஆகியவற்றிற்கான மானியம் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். இத்திட்டம் வங்கிக் கடனுதவியுடன் செயல்படுத்தக் கூழய திட்டமாகும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் (அ) வட்டாட்சியர் கையொப்பமிட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி டின் எண்ணுடன் (Quotation with TIN No.) ஓட்டுநா உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகனக் கடனுக்கு மட்டும்) முன் அனுபவச் சான்று, திட்ட அறிக்கை மாவட்ட மேலாளா மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள்
தகுதிகள் -: ஆதிதிராவிட மகளா உறுப்பினர்களாக உள்ள மகளிர் சுய உதவிக் குழுவாக மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சுழல் நிதி பெறுவதற்கு குழு தரம் பிரிக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரக் கடன் பெறுவதற்கு சுழல் நிதி பெற்று, இரண்டாவது முறையாக தரம் பிரித்தல் செய்யப்பட்டு, தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக் குழு வேறு எந்த அரசு திட்டத்திலும் சுழல் நிதி மற்றும் பொருளாதாரக் கடனுக்கான மானியம் பெற்றிருக்கக் கூடாது.

சுழல் நிதிக்கான மானியம் – குழு தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு தரம் பிரித்தல் செய்யப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றிருப்பின் வங்கியில் சுழல் நிதி பெறுவதற்காக தாட்கோ மானியம் ரூ.25,000 வங்கிக்கு விடுவிக்கப்படும். இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) இருக்கும்.

பொருளாதார கடனுதவிக்கான மானியம் – திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குழுவிற்கும் அதிகபட்சமாக 50% அல்லது ரூ.2.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். பொருளாதாரக் கடன் பெறுவதற்கு தாட்கோ மானிய உதவியுடன் சுழல் நிதி பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) இருக்கும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: மகளிர் சுய உதவிக் குழு சுழல் நிதி பெற்று இரண்டு முறை தரம் பிரித்தல் செய்து தேர்ச்சி பெற்ற குழுக்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை (2 நகல்களில்) விண்ணப்பத்துடன் இணைத்து தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

குழு தரம் பிரித்தல் சான்று குழு உறுப்பினர்களின் விவரங்கள் புகைப்படத்துடன் இணைக்கப்பட வேண்டும், குழு உறுப்பினர்களின் குடும்ப அட்டை நகல், குழு உறுப்பினர்களின் சாதிச் சான்றின் நகல், குடும்ப ஆண்டு வருமானச் சான்றின் நகல், குழுவின் தீர்மான நகல், திட்ட அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தக நகல்.

மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதித் திட்டம்

நோக்கம் :

தாட்கோ திட்டங்கள் எதிலும் உடனடியாக பயன்பெற இயலாதவர்களுக்கு விரைவில் சுய தொழில் புரிந்து பயன்பெறும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறாத ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்றோர், 40 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் மற்றும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எந்த ஒரு அரசு திட்டத்தின் கீழும் மாதாந்திர அடிப்படையில் தொடர்ந்து பணப் பயன் பெறாதவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல் (அ) வட்டாட்சியர் கையொப்பமிட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி டின் எண்ணுடன் (Quotation with TIN No.)

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் முறை :

இத்திட்டத்திற்கான பயனாளிகள் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவ்ர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு மானியம் விடுவிக்கப்படும்.

விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.
விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதள முகவரிp http://application.tahdco.com.
அனைத்து திட்டங்களுக்கும் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.

புகைப்படம், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானம், விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, கல்விச் சான்று.
ஓட்டுநர் உரிமத்துடன் மற்றும் பேட்ஜ் (வாகனக் கடனுக்கு மட்டும்)
குழு தரம் பிரித்தல் சான்று (சுழல் நிதி மற்றும் பொருளாதாரக் கடன்களுக்கு மட்டும்)
நிலத்திற்கான பட்டா மற்றும் சிட்டா புலப்பட நகல் (FMB Sketch) / ”அ” பதிவேடு நகல்
வில்லங்கச் சான்று (நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மட்டும்)

இத்திட்டங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அணுக வேண்ழய முகவரி
தாட்கோ அலுவலக முகவரி

மாவட்ட மேலாளர்,

தாட்கோ,
நாகை பைபாஸ் ரோடு,
திருவாரூர்.