மூடு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 04.010.2007 அன்று துவங்கப்பட்டு இதற்கென தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் தலைமுனைகள் அமைக்கப்பட்டன. குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

பல்வேறு காரணங்களினால் செயலிழந்த நிலையில் இருந்த அரசு கேபிள் டிவி நிறுவனம் இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் புனரமைக்கப்பட்டு புத்துயிரூட்டப்பட்டது. இதற்காக இந்நிறுவனத்திற்கு ரூ.3 கோடி நிதியுதவி கடனாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது
தமிழகத்தின் 27 மாவட்ட தலைநகரங்களில் விருப்பமுள்ள தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குத்தகைக்கு எடுத்ததுடன், ஏற்கனவே 4 மாவட்டங்களில் இருந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறைகளை புனரமைத்தது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 30.8.2011 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் ரூ.70/- என்ற கட்டணத்தில் தரமான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்கும் எனவும், இதில் ரூ.20/-ஐ மட்டும் கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்துவார்கள் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2.9.2011 அன்று வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைமுனையினை காணொலி காட்சி வாயிலாக இயக்கி வைத்து இந்நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையினை சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்தார்கள். 20.10.2012 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகரப் பகுதிகளுக்கான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையினை துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் பொது மக்களுக்கு ரூ.70/- என்ற மிக குறைந்த கட்டணத்தில் 90-100 சேனல்களுடன் தரமான கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் மிக அதிக அளவிலான கேபிள் ஆப்பரேட்டர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையினை பெற்று வருகின்றனர்.

02.09.2011ல் இந்நிறுவனம் தனது சேவையை தொடங்கியபோது இந்நிறுவனத்தின் சந்தாதாதரர்களின் எண்ணிக்கை 4.94 இலட்சங்கள் என இருந்தது. இந்த எண்ணிக்கை 31.03.2013 அன்றைய நிலவரப்படி 61,54,531 என உயர்ந்துள்ளதிலிருந்து இந்நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சியை அறியலாம். மேலும் இந்நிறுவனத்தின் இணைப்பு பெற்றுள்ள ஆப்பரேட்டர்களின் எண்ணிக்கை 24,300 என உயர்ந்துள்ளது. இந் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை ஒரு கோடி என உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 137 கட்டணச் சேனல்களின் சிக்னல்களை வாங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது ஏறத்தாழ அனைத்து கட்டணச் சேனல்களையும் பெற்றுள்ளது. இந் நிறுவனம் தற்பொழுது இலவச சேனல்கள், கட்டணச் சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களுடன் சேர்த்து மொத்தம் 90 முதல் 100 சேனல்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சேவையினை தொடங்குவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதுடன், கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அதிக அளவு கட்டணங்களை, அப்போது பொதுமக்கள் கேபிள் டிவி சேவையைப் பெற மாதம் ஒன்றிற்கு ரூ.150/- முதல் ரூ.250/- வரை கேபிள் டிவி சேவைக்கான மாத சந்தா தொகையாக செலுத்தி வந்தனர்.
தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் அளிக்கப்பட்டு வரும் கேபிள் டிவி சேவை, கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் பொது மக்களின் நலநன கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட நலத்திட்டமாகும். தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெருமளவிளான கட்டணச் சேனல்களுடன் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவையை அளித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரூ.80 முதல் ரூ.180 வரை சேமிப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் கேபிள் டிவி சேவை பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இதுவரை 1200 உள்ளூர் சேனல்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கியுள்ளது. அவற்றுள் சுமார் 800 உள்ளூர் சேனல்கள் இந்நிறுவனம் வாயிலாக தங்களுடைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன.

சென்னை மாநகர சேவை துவக்கம்

20.10.2012 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையை சென்னை மாநகரப் பகுதிகளில் துவக்கி வைத்தார்கள். இந்நிறுவனம், சென்னை மாநகரப் பகுதிகளில் அனலாக் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு அளித்து வருகிறது. மேலும், டிஜிட்டல் முறையிலான சிக்னல்களை வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், 100 தரமான தெளிவான சேனல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வாயிலாக மாதம் ரூ.70 என்னும் குறைந்த கட்டணத்தில் சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சந்தாதாரர்களுக்கு அளித்து வருகிறது.

டிஜிட்டல் மயமாக்கம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சென்னை மாநகரத்தின் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) பகுதி மக்களுக்கு பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (Multi System Operator – MSO) உரிமம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி நாடு முழுவதும் 31.12.2014க்குள் கேபிள் டிவி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இதில் முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களை டிஜிட்டல் மயமாக்கிட வேண்டும்.

சென்னை மாநகரப் பகுதியை டிஜிட்டல் மயமாக்க நிறுவனம் எடுத்துவரும் நடவடிக்கைகள்

சென்னை மாநகரப்பகுதியில் டிஜிட்டல் சிக்னல் வழங்கி டிஜிட்டல் மயமாக்கிட, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிறுவனம் ரூ.20.72 கோடியை டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையை மேம்படுத்தவும் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) சந்ததாரர் மேலாண்மை அமைப்பு (Subscriber Management System – SMS) மற்றும் செட்-டாப் பாக்ஸ்கள் வாங்கவும், தகவல் மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொடர்பான இதர உபகரணங்கள் வாங்கவும் முதலீடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைய விருப்பம் தெரிவித்து சென்னை மாநகர பகுதியில் உள்ள 14,66,336 சந்தாதாரர்களைக் கொண்ட 2577 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் இந் நிறுவனத்தில் பதிவு செய்து உள்ளனர். 1223 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்கள் கேட்டு பதிவு செய்துள்ளனர்.

Standard Definition (SD) சேனல் தொகுப்புகள் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு, பின்வருமாறு நான்கு தொகுப்புகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வரிசை எண் தொகுப்பின் பெயர் கட்டண சேனல்களின் எண்ணிக்கை கட்டணமில்லா சேனல்களின் எண்ணிக்கை மொத்த சேனல்களின் எண்ணிக்கை மாதச் சந்தா (ரூபாய்)
1 தொகுப்பு – 1 22 158 180 ரூ.125
2 தொகுப்பு – 2 72 158 230 ரூ.175

செட்டாப் பாக்ஸ்:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 17.04.2017 அன்று டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்(DAS) வழங்கி ஆணையிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை துவங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதற்கும் DAS டிஜிட்டல் சிக்னல் வழங்குவதற்காக சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை MPEG 2 தொழில்நுட்பத்திலிருந்து MPEG 4 தொழில்நுட்பத்திற்கு மாற்றியமைத்து அதற்கு தேவையான சர்வர்களை நிறுவியுள்ளது.

மேற்படி நேர்வில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 01-09-2017 அன்று தலைமைச் செயலக வளாகத்தில் செட்டாப் பாக்ஸ்களை பயனாளிகளுக்கு வழங்கி டிஜிட்டல் ஒளிபரப்பினை துவக்கி வைத்தார்.
மேலும் 32 மாவட்டங்களுக்கு (மாவட்டத்திர்கு 1000 பாக்ஸ்கள் வீதம்) 32,000 செட்டாப் பாக்ஸ்கள் முதல் கட்டமாக விநியோகம் செய்ய ஏதுவாக சம்மந்தப்பட்ட மாவட்ட துணை மேலாளர்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி செயலாக்கம் செய்வதற்காக(Installation and one time Actரூivation fee) ரூ.200/- (ரூபாய் இருநூறு) ஒரு முறை மட்டும் பெற்றுக் கொள்வத்ற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விலையில்லா செட்டாப் பாக்ஸ்கள் என்பதால் நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200/-க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் பெற்று பயன்பெறும் சந்தாதாரர்கள் இந்நிறுவனத்தின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை நிறுவும் போதும், இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2911-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.