மூடு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

மாவட்ட சமூக நல அலுவலர்

மாவட்ட சமூக நல அலுவலகம்,
அறை எண் – 5 மாவட்ட ஆட்சியரகம்,
திருவாரூர் – 04366 – 224861
மின்னஞ்சல் முகவரி dswo.tntvr@nic.in

சமூக நலத்துறை மகளிர் சமுதாயத்தில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றிட செயல்பட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய சமூக உரிமை பெற்றிடவும் செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறையில் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் 5 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் உள்ளன. அவை ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக பயனாளிகளுக்கு 23.05.2016 முதல் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் கலவித்தகுதிக்கேற்ப திருமண நிதி பட்டம் / பட்டயப்படிப்பிற்கு ரூ.50,000/- மேல்நிலைக்கல்வி ரூ.25,000/-மும் வழங்கப்படுகிறது.

சமூக நலத்துறை

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்

தற்போது பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள் தற்போது பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள்
வயது திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும்,
திட்டத்தில் பயன்பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
கல்வித்தகுதி கல்வித்தகுதி
திட்டம் 1
(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
1) 10ம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2) தொலைதூரக் கல்வி / தனியார் மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.
3) பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
திட்டம் 2
(பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
1) பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
2) நிதியுதவி பெறுவதற்கு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். (னுடடிஅய ழடிடனநசள) மேற்படி பட்டயப்படிப்பு தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
வருமான வரம்பு வருமான வரம்பு
திட்டம் 1 மற்றும் 2
(ரூ.25,000/- (நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
(பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,
விண்ணப்பத்தை அளிக்கும் கால அளவு விண்ணப்பத்தை அளிக்கும் கால அளவு
திட்டம் 1 மற்றும் 2
(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
(பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.

திருமண நாளன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்னரோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது,

சமர்பிக்க வேண்டிய சான்றுகள் சமர்பிக்க வேண்டிய சான்றுகள்
திட்டம் 1
(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
1) பள்ளி மாற்றுச் சான்று நகல்
2) மதிப்பெண் பட்டியல் நகல்
3) வருமானச் சான்று
4) திருமண அழைப்பிதழ்
திட்டம் 2
(பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
1) கல்வி மாற்று சான்று நகல்
2) பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு சான்று நகல்
3) வருமானச் சான்று
4) திருமண அழைப்பிதழ்
பயன்பெறுவோர் பயன்பெறுவோர்
திட்டம் 1 மற்றும் 2
(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
(பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)
1) தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்
2) பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்

 

இதர திருமண நிதி உதவி பெற தகுதிகள்
திட்டங்கள் தற்போது பரிந்துரைக்கப்படும் விதிமுறைகள்
ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம் 1) குடும்ப ஆண்டு வருமானம்
ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2).விண்ணபிக்க வேண்டிய கால அளவு விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.
3. வயது
திருமணத்தின்போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை,
4. சான்றுகள்
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு விதவைச்சன்று, வருமானச்சான்று தேவையில்லை. விதவை உதவி தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச்சான்று மற்றும் வருமானச்சான்று தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்
5. திருமண நிதியுதவி பெறுவர்கள்
மணப்பெண்ணின் தாயிடம் வழங்கலாம். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், மணமகளிடம் வழங்கலாம்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் 1) குடும்ப ஆண்டு வருமானம்
ரூ,24,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,
2) விண்ணபிக்க வேண்டிய கால அளவு
விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.
3) வயது
திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை,
4) சான்றுகள்
ஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும்.
5) திருமண நிதியுதவி பெறுபவர்கள்
மணமகளிடம் வழங்கலாம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் 1) இத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்.
2) வயது
திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
3) சான்றுகள்
1. திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று
2. மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று
5) திருமண நிதியுதவி பெறுபவர்கள்
மணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்.
திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.
திட்டம்-2-ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/-மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.
டாக்ட்ர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம் 1) விண்ணபிக்க வேண்டிய கால அளவு
திருமணமாகி ஆறு மாதத்திற்குள்
2) வயது வரம்பு
திருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20-ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்.
3) சான்றுகள்
1, விதவைச் சான்று
2. மறுமணச் சான்று
5) திருமண நிதியுதவி பெறுபவர்கள்
மறுமணம் செய்யும் மணமகள்
6. நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.
திட்டம்-2-ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/-மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.

 

மூவலூர் இராமாமிர்தம் அமமையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்

திட்டம் – 1

ரூ.25,000/- நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம வழங்கும் திட்டம்

  • வயது வரம்பு
    திருமத்தின் போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். திட்டத்தில் பயன்பெறுவரற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.
  • கல்வித்தகுதி
  • 10ம்வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணபிக்கலாம்
  • தொலைதூரக் கல்வி / தனியார் மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அமைந்திருத்தல் வேண்டும்
  • பழங்குடியினர் 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது

திட்டம் – 2

பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்

  • வயது வரம்பு
  • திருமணத்தின்போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். அத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
  • கல்வித்தகுதி
  • பட்டப்படிப்பு கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமொ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்
  • மணப்பெண் பட்டயப்படிப்பு (னுடடிஅய ழடிடனநசள) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து பட்யப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்
  • வருமான வரம்பு (திட்டம் 1 மற்றும் 2)
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
  • விண்ணப்பத்தை அளிக்கும் கால அளவு (திட்டம் 1 மற்றும் 2)
  • விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம். திருமண நாளன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்னரோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்
  • பள்ளி மாற்று சான்று நகல்
  • மதிப்பெண் பட்டியல் சான்று நகல்
  • வருமானச் சான்று
  • திருமண அழைப்பிதழ்
  • சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்
  • கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட மாற்று சான்று நகல்
  • பட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு சான்று நகல்
  • வருமானச் சான்று
  • திருமண அழைப்பிதழ்
  • பயன்பெறுவோர் (திட்டம் 1 மற்றும் 2)
  • தாய் அல்லது தந்தை பெயரில் காசோலை வழங்கலாம் (அல்லது)
    பெற்றோர் இல்லையெனில் மணமகள் பெயரில் காசோலை வழங்கலாம்
  • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு
  • திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்
  • வயது
  • குறைந்தபட்ச வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
  • சான்றுகள்
  • சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு விதவைச்சன்று, வருமானச்சான்று தேவையில்லை. விதவை உதவி தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச்சான்று மற்றும் வருமானச்சான்று தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்
  • திருமண நிதியுதவி பெறுவர்கள்
  • மணப்பெண்ணின் தாயிடம் வழங்கலாம். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், மணமகளிடம் வழங்கலாம்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு
    திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணபிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்
  • குறைந்தபட்ச வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
  • சான்றுகள்
    ஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும்
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகளிடம் வழங்கலாம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்

  • இத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்
  • வயது
    திருமணத்தின் போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை
  • சான்றுகள்
  • திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று
  • மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று
  • திருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்
  • நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
    திட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும். திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு (ரூ.50,000/-ம் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000/-. தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்
  • டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம்
  • விண்ணபிக்க வேண்டிய கால அளவு திருமணமாகி ஆறு மாதத்திற்குள் இருத்தல் வேண்டும்
  • வயது வரம்பு
    திருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்
  • சான்று
  • விதவைச் சான்று
  • மறுமண பத்திரிக்கை
  • திருமண நிதியுதவி பெறுவபவர்கள் மறுமணம் செய்யும் மணமகள்
  • நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்
    திட்டம் 1ல் ரூ.25,000 –மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்,
    திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 –மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

திட்டம் – 1

  • ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
    திட்டம் – 2
  • இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
    திட்டம் – 3
  • முதல் குழந்தை பேற்றின் போது ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது குழந்தைப் பேற்றின் போது, இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் சிறப்பினமாக கருதி, மூன்று பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000/- வீதம் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.
    திட்டத்தின் நோக்கம்
    பெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி (10ம் வகுப்பு) அளிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்

  • தாய் தந்தையரின் வயதுச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று)
  • பெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்று
  • குடும்ப நல அறுவைசிகிச்சை சான்று (தாய் அல்லது தந்தை)
  • 10ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்து வருவதற்கான சான்று (வட்டாட்சயர்)
  • ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சயர்)
  • குடும்ப வருமான சான்று (வட்டாட்சயர்)
  • ஆண் குழந்தை தத்து எடுக்க மாட்டேன் என்பதற்கான சான்று (பெற்றோர்)
  • குடும்ப புகைப்படம்
  • குடும்ப அட்டை நகல்
  • ஆதார் நகல்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச

தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

  • இத்திட்டத்தில் பயன்பெற தகுதிகள்
  • வயது – 40க்குள் இருக்க வேண்டும்
  • விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.
    சான்றுகள்
  • பள்ளி மாற்றுச் சான்று
  • விதவைச் சான்று
  • கணவரால் கைவிடப்பட்டவர் சான்று
  • வருமானச் சான்று 72,000க்குள்
  • தையற் பயிற்சி சான்று (குறைந்தது 6 மாதம்)
  • ஆதார் நகல்