மூடு

அடைவது எப்படி

எப்படி அடைவது?

சென்னைக்கும் திருவாரூருக்கும் இடையே உள்ள தூரம் சாலைவழியே 318 கி.மீ., இருப்புப்பாதை வழியே 294 கி.மீ., வான்வழியே 262 கி.மீ. ஆகும்.

வானுர்திவானூர்தி வசதிகள்

திருவாரூருக்கு அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது திருவாரூரிலிருந்து இரண்டரை மணிநேரம் பயணிக்கத்தக்க 110 கி.மீ., தொலைவில் உள்ளது. இவ்விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களுர் போன்ற முக்கிய நகரங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பிறநாடுகளுக்கும் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்கள் விமான சேவை அளிக்கின்றன.

இருப்பூர்திதொடர்வண்டி வசதிகள்

திருவாரூர் தொடர்வண்டி நிலையம் மேற்கே தஞ்சாவூரையும், வடக்கே மயிலாடுதுறையையும், கிழக்கே நாகப்பட்டினத்தையும், தெற்கே திருத்துறைப்பூண்டியையும் இணைக்கும் நான்குவழி சந்திப்பாகும்.

பேருந்துபேருந்து வசதிகள்

திருவாரூர் மாநிலத்தின் முக்கிய நகரங்களால் சாலை வழியாகவும், இருப்புப்பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45A, கோயம்புத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67 ஆகியவற்றுடன் திருவாரூர் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் மாநகரங்கள் ஆகியவற்றுடன் திருவாரூர் இணைக்கப்பட்டுள்ளது.