சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம் பெறலாம்: நமது மாவட்ட விவசாயிகள் உடனே பதிவு செய்ய அழைப்புதொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 05/10/2026
மாவட்ட நுண்ணீர் (சொட்டுநீர்) பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துடன் சேர்த்து, நீர் கொண்டு செல்லும் குழாய்கள், கிணறுகள், மின் மோட்டார்கள் மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவுவதற்கு 50 விழுக்காடு வரை கூடுதல் பின்னேற்பு மானியமும் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் போன்ற தேவையான ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகி பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார் செ .மு .எண்.10-PDF-275KB-பதிவிறக்கம் செய்க