மன்னார்குடியில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 20/08/2026
மாவட்டஆட்சியர் அவர்கள் மன்னார்குடி வட்டத்தில் 19-08-2026 காலை 9:00 மணி முதல் 20-08-2026 காலை 9:00 மணி வரை 24 மணி நேர முகாம் அடிப்படையிலான கள ஆய்வை மேற்கொண்டார். மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களின் குறைகளுக்கு நேரடியாக உடனுக்குடன் தீர்வு காண்பதும், அரசின் நலத்திட்டங்கள் தகுதியான மக்களை எவ்வித தடையுமின்றி சென்றடைவதை உறுதி செய்வதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

