திரு இல. நிர்மல் ராஜ் இ.ஆ.ப
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு.இல.நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் 2010-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி பிரிவினை சேர்ந்தவராவார். இவர் சென்னை அண்ணாப்பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் (Mechanical) பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் துணைஆட்சியர் பயிற்சி முடித்த பிறகு கரூர் மாவட்டம் கரூர் மற்றும் திருப்பூர் கோட்டங்களில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஜூலை 2016-ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று நாளைய தேதி வரை பணியாற்றி வருகிறார். தொடர்ச்சியாக 2015 மற்றும் 2016-ம் ஆண்டு கொடிநாள் வசூலில் முதலிடம் பெற்றமைக்கு தமிழக ஆளுநர் அவர்களிடமிருந்து சிறந்த கொடிநாள் வசூல் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். மார்ச் 2018-ல் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் குளங்களை தூர் வாருதல் பணியில் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்கான தமிழக முதலமைச்சர் விருதினையும் மற்றும் பாரத பிரதமர் அவர்களின் பயிர் காப்பிட்டுத்திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்தியமைக்கான விருதினையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.