பள்ளிக் கல்வித்துறை
கல்வி
கல்வி என்பது அறிவைத் தூண்டுவதாகவும் ஆற்றலை துலக்குவதாகவும் இருத்தல் வேண்டும் என்பதற்கிணங்க இன்றைய அரசு வாழ்க்கையோடு ஒட்டிய வாழ்க்கைக்கு பயன் தரக்கூடிய திட்டத்தை வகுத்துள்ளது, ஒவ்வொருவருக்கும் உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் ஒரு சேர வளர வேண்டும், அறிவு துலங்கக் கல்வியும் கேள்வியும் துணைபுரியும். நமது கலாச்சாரம் வளரவும் மாணவர்களுக்கு முறையான கல்வி அவசியம் ஆகும்.
நோக்கம்
தொடக்க , இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் சுமையற்ற தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல். மேலும் பள்ளிகளுக்கான கட்டுமான பணிகள் மற்றும் மாணவ மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்தல்.
குறிக்கோள்
தரமான சமச்சீர் கல்வியை அனைவருக்கும் அளித்தல்
மாணவ மாணவியருக்கு பாதுகாப்பான சூழ்நிலையைப் பள்ளிகளில் உறுதி செய்தல்
கல்வி கற்றலில் அடிப்படைத் திறன்களை வளர்த்தல், வாழ்க்கைக்கு உதவும் வகையில் கல்வியில் அடைவுத் திறனை ஊக்குவித்தல்
ஒவ்வொரு மாணவ மாணவியரும் ஏற்றுக் கொள்ளத் தக்க பள்ளியில் சூழ்நிலை மற்றும் கட்டுமானங்களை ஏற்படுத்துதல்
‘குழந்தை மையக் கல்வியை உறுதி செய்தல்
தேர்வினால் ஏற்படும் மனஉளர்ச்சியை தவிற்கும் பொருட்டு , தொடர் மற்றும் முழுமையான மதிப்பிடுதல் முறையை (Continuous and Comprehensive Evaluation) பயன்படுத்தி மாணவர்களை மதிப்பீடு முறையை ஊக்குவித்தல்
பள்ளிக் கல்வித் துறை திருவாரூர் மாவட்டம்
நிர்வாகத்தின் அடிப்படையில் பள்ளிகளின் எண்ணிக்கை
நிர்வாகம் | நர்ஸரி தொடக்கப் பள்ளிகள் | தொடக்கப் பள்ளிகள் | நடுநிலைப் பள்ளிகள் | உயர்நிலைப் பள்ளிகள் 1 to 10 | மேல்நிலைப் பள்ளிகள் 1 to 12 | மொத்தம் |
---|---|---|---|---|---|---|
1 to 5 | 1 to 8 | 6 to 10 | 6 to 12 | |||
பள்ளிக் கல்வித்துறை | 0 | 3 | 1 | 65 | 69 | 138 |
ஆதி திராவிடர் நலம் & சமூக நலத்துறை | 0 | 27 | 0 | 1 | 3 | 31 |
அரசு உதவி பெறும் பள்ளிகள் | 0 | 71 | 29 | 12 | 14 | 126 |
தனியார் பள்ளிகள் | 140 | 1 | 2 | 1 | 3 | 147 |
பதின்மப் பள்ளிகள் | 0 | 0 | 5 | 17 | 27 | 49 |
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) | 0 | 0 | 1 | 0 | 2 | 3 |
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் | 0 | 553 | 203 | 0 | 0 | 756 |
நகராட்சிப் பள்ளிகள் | 0 | 9 | 5 | 1 | 1 | 16 |
கேந்திரிய வித்யாலயா | 0 | 0 | 0 | 1 | 0 | 1 |
மொத்தம் | 140 | 664 | 246 | 98 | 119 | 1267 |
பள்ளிக் கல்வித் துறை திருவாரூர் மாவட்டம்
நலத் திட்டங்கள்
( முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்படுகிறது)
வ.எண் | திட்டங்கள் | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2016-17 | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2017-18 |
---|---|---|---|---|
01 | விலையில்லா மடிக்கணிணிகள் | 12ஆம் வகுப்பு | 11725 | 0 |
02 | விலையில்லா மிதிவண்டிகள் | 11 ஆம் வகுப்பு | 12925 | 0 |
03 | இடைநிற்றலை குறைப்பதற்காக வழங்கப்படும் உதவித்தொகை | 10, 11 & 12 ஆம் வகுப்புகள் | 11761 | 0 |
04 | ஊதியமீட்டும் தாய்.தந்தை விபத்தினால் இறந்ததால் அவர்களின் கல்வி கற்கும் குழந்தைகளுக் கு வழங்கப்படும் உதவித் தொகை | 6 முதல் 12 ஆம் வகுப்புகள் | 19 | 17 |
பள்ளிக் கல்வித் துறை திருவாரூர் மாவட்டம்
நலத் திட்டங்கள்
( மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்படுகிறது)
வ.எண் | திட்டங்கள் | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2016-17 | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2017-18 |
---|---|---|---|---|
1 | விலையில்லா பாடபுத்தகங்கள் | 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை | 87673 | 79219 |
2 | விலையில்லா நோட்டுகள் | 6 முதல் 10ஆம் வகுப்பு வரை | 50511 | 48697 |
3 | விலையில்லா பை | 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை | 76731 | 0 |
4 | விலையில்லா சீருடைகள் | 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை | 22296 | 22180 |
5 | விலையில்லா காலணிகள் | 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 51879 | 0 |
6 | விலையில்லா பயணஅட்டை | 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை | 25108 | 22621 |
7 | விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் | 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 7947 | 7092 |
8 | விலையில்லா புவியியல் அட்லஸ் | 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை | 0 | 0 |
பள்ளிக் கல்வித் துறை திருவாரூர் மாவட்டம்
நலத் திட்டங்கள்
( மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்படுகிறது)
வ.எண் | திட்டங்கள் | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2016-17 | பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை 2017-18 |
---|---|---|---|---|
1 | விலையில்லா பாடபுத்தகங்கள் | 1st to 8th Std | 64139 | 62353 |
2 | விலையில்லா நோட்டுகள் | 1st to 8th Std | 64139 | 62353 |
3 | விலையில்லா பைகள் | 1st to 8th Std | 63535 | 0 |
4 | விலையில்லா சீருடைகள் | 1st to 8th Std | 64752 | 55452 |
5 | விலையில்லா காலணிகள் | 1st to 8th Std | 62670 | 0 |
6 | விலையில்லா பயணஅட்டை | 1st to 8th Std | 790 | 773 |
7 | விலையில்லா வண்ணக் கிரையான்கள் | 1st to 2nd Std | 18008 | 18444 |
8 | விலையில்லா வண்ண பென்சில்கள் | 3rd to 5th Std | 28899 | 29961 |
9 | விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் | 6th to 8th Std | 4154 | 5821 |
10 | விலையில்லா புவியியல் அட்லஸ் | 6th to 8th Std | 0 | 0 |
11 | ஊதியமீட்டும் தாய்.தந்தை விபத்தினால் இறந்ததால் அவர்களின் கல்வி கற்கும் குழந்தைகளுக் கு வழங்கப்படும் உதவித் தொகை | 1st to 8th Std | 20 | 0 |