மூடு

கால்நடை வளர்ப்பு

விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம்

மாண்புமிகு தமிழக முதல்வா் அவர்களால் 15.09.2011 அன்று தொடங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களில், தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக, ஒரு பயனாளிக்கு 4 வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வீதம், 31 மாவட்டங்களில் 7,70,539 பயனாளிகளுக்கு, 30,82,156 வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் தமிழகத்தில் மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்கும் வகையில், 21 மாவட்டங்களில், 67,322 பயனாளிகளுக்கு 67,322 கறவை பசுக்களும் 2011 – 2012 முதல் 2017 – 2018 முடிய உள்ள ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் மேற்படி திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்ட விபரம் கீழ் வருமாறு:

வ.எண் ஆண்டு திட்டத்தின் பெயா் குறியீடு

பயனாளிகளின் எண்ணிக்கை

குறியீடு

வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை

சாதனை

பயனாளிகளின் எண்ணிக்கை

 

சாதனை

வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை

1 2011 – 12 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
2 2012 – 13 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
3 2013 – 14 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
4 2014 – 15 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 400 400 400 400
5 2015 – 16 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 550 550 550 550
6 2016 – 17 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 50 50 50 50
7 2017 – 18 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 600 600 600 600
மொத்தம் 2800 2800 2800 2800

 

 

 

வ.எண் ஆண்டு திட்டத்தின் பெயா் குறியீடு

பயனாளிகளின் எண்ணிக்கை

குறியீடு

வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை

சாதனை

பயனாளிகளின் எண்ணிக்கை

சாதனை

வழங்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை

1 2011 – 12 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 2447 9788 2447 9788
2 2012 – 13 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 4262 17048 4262 17048
3 2013 – 14 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 3929 15716 3929 15716
4 2014 – 15 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 3901 15604 3901 15604
5 2015 – 16 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 4105 16420 4105 16420
6 2016 – 17 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 408 1632 408 1632
7 2017 – 18 விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் 4229 16916 4229 16916
மொத்தம் 23281 93124 23281 93124

 

 

விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு கால்நடைகளை சிறப்பாக பராமாித்த பயனாளிகளுக்கு மேற்படி ஆண்டுகளின் தழிழ் புத்தாண்டு தினத்தில் பாிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்கவும், வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகளின் எடையினை அதிகக்கவும், கறவைப்பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவ பாிசோதனையும், வௌ்ளாடுகள்/செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் 2012 ஆண்டு முதல் நாட்டுக்கோழி வளா்ப்பு திட்டம் கால்நடை பராமாரிப்புத்துறையில் மூலம் செயல்பட்டு வருகிறது.
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் ஒவ்வொரு ஆண்டும் திருவாரூா் மாவட்டத்தில் குறியீடு நிா்ணயம் செய்யப்பட்டு 250 கோழிக் குஞ்சுகள் கொண்ட பண்ணை அமைக்க திட்ட மதிப்பீடு நிா்ணயம் செய்யப்பட்டு வங்கி மூலம் கடன் பெற்று பண்ணை தொடங்குபவா்களுக்கு தமிழக அரசு மானியமும், பண்ணையை தொடா்ந்து நடத்துபவருக்கு ஊக்கத்தொகையும் வழங்கபட்டு வருகிறது.
வங்கி கடன் பெறாமல் சுயநிதியில் கட்டடம் கட்டி பண்ணை நடத்துபவா;கள் இத்திட்டத்தில் தகுதி அடிப்படையில் சோ்க்கப்பட்டால் அவா்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் மானியம் வழங்கப்படும். கோழிப்பண்ணை நடத்த கொட்டகை அமைக்கும் போது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அங்கீகரித்த வடிவமைப்பில் இருக்க வேண்டும். வங்கி கடன் பெற தங்கள் பகுதி வங்கி மேலாளரை அணுகி விண்ணப்பம் அளித்திட வேண்டும்.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் வசிப்பவார்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். திட்டத்தில் பயனடைய விரும்புவோா்முழு விவரங்கள் தொரிந்து கொள்ள அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பம் அளித்திட வேண்டும்.

மாநில தீவன அபிவிருத்தி திட்டம்

“இலாபகரமான கால்நடை வளா்ப்பிற்கு அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிா் அபிவிருத்தி திட்டம்”

கால்நடைகளின் உற்பத்தித்திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 – 70 விழுக்காடு, தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பொரிய இடைவெளி உள்ளது.
ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும்,கால்நடைவளா்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின்; வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய கீழ்கண் தீவனப்பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ). இறவையில் பல்லாண்டு தீவன சோளம்தீவனப்பயிர் 50 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல் (பயனாளி ஒருவருக்கு 0.25 ஏக்கர் வீதம்)
ஆ). மானாவாயில் 100 ஏக்கர் பரப்பில் தீவனச் சோளம் மற்றும் தீவனத் தட்டைப்பயறு சாகுபடி செய்திட தீவன விதைகள் வழங்குதல் (பயனாளி ஒருவருக்கு 0.25 வீதம்)
இ) மர வகை தீவனத்தின் முக்கியத்துவத்தை உணார்த்த வெல்வேல், பூவரகு,  வாகை, கல்யாண முருங்கை, வேம்பு, கொடுக்காபுலி போன்ற மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்குதல். மரவகை தீவனப்பயிர் உற்பத்தியை பெருக்குதல் மூலம் கோடை மற்றும் தீவன பற்றாக்குறை காலங்களில் தீவனம் கிடைக்க செய்தல்.
ஈ). அசோலா திடல் அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.2550 மானியம் வழங்குதல் (100 சதம் மானியம்) (இம்மாவட்த்திற்கு ஒதுக்கப்பட்ட அலகுகள் 200)
உ). தீவனப்பயிர் அதிக அளவில் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேகரித்து பதப்படுத்தி ஊறுகாய் புல்  ஆக கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை காலங்களில் வழங்குவதற்கு 250 கிலோ கொள்ளளவு உடைய 4 சைலேஜ் பைகள் ஒரு விவசாயிக்கு ஊறுகாய் புல் தயாhpத்திட இலவசமாக வழங்கப்படும்.
மேற்காணும் திட்டங்களின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை நேரில் தொடார்பு கொண்டு பயன்பெறலாம்.

கால்நடை பாதுகாப்புத் திட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் திருவாரூர்  கோட்டத்தில் – 70 முகாம்களும், மன்னார்குடி  கோட்டத்தில் – 70 முகாம்களும் மொத்தம் 140 முகாம்கள் மாவட்ட குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்க்ம், செயற்கை முறை கருவுட்டல் ஆகியவை அளிக்கப்படுகின்றன. மேலும் கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கன்றுகளுக்கு பசுகள் வழங்கப்படுகிறன்றன. ஒவ்வொரு முகாமிற்கும் ரூ.1200- வீதம் (செயற்கை முறை கருவுட்டல் – ரூ.300- விளம்பரம் மற்றும் பிரச்சாரம் – ரூ.500- பசு வழங்குதல் – ரூ.400-) செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. இச்செலவினத்திற்கு நிதி ஒதுக்கீடு சென்னை, கால்நடை பராமரிப்பு  மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குனர் அவர்களால் வழங்கப்படுகிறது.

கால்நடை பராமரிப்புத்துறை

14வது சுற்று கோமா நோய் தடுப்புசிப் பணி 2018

திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாய பெருங்குடி மக்கள் நல்ல முறையில் வளர்த்து வரும் கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமா நோய். இந்நோய் வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.

கால்நடைகளில் (பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த, ஒவ்வொரு வருடமும் கால்நடைகளுக்குhpய தடுப்புசி மருந்தினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. கோமா நோய் தடுப்பூசிப் பணிகள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 1ம் தேதி முதல் 21ம் தேதி முடிய மற்றும் செப்டம்பர் 1 முதல் 21 முடிய கிராம வாயிலாக தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கால்நடை மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு அந்தந்த கிராமங்களில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் தடுப்பூசிப் பணி மேற்கொள்வார்கள்.

கால்நடை வளர்ப்போர் , தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது தங்களிடமுள்ள 3 மாதத்திற்கு மேல் வயதுள்ள கன்றுகளுக்கும், சினைப்பசுக்கள், கறவைப்பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கும் தவறாமல் தடுப்புசியினை போட்டுக் கொண்டு பயன்பெற்று வருகின்றார்கள்.