Close

Mustering

Publish Date : 02/07/2018

திருவாரூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜீன் மாதம் வரை கருவூலத்தில் நேரில் வந்து நேர்காணலை (Mustering) பதிவு செய்யவும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச் சான்று பெற்று கருவூலத்திற்கும் அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு 2018 ஏப்ரல் மாதம் முதல் 2018 ஜீன் மாதம் வரை நேர்காணலுக்கு ஆஜராகி பதிவு செய்ய வேலைநாட்களில் வருமாறு ஏற்கனவே கேட்டு;க் கொள்ளப்பட்டார்கள். எனினும் இந்நாள் வரை நேர்காணலுக்கு வராதவர்கள் உடனடியாக தங்களது இருப்பினை 31.07.2018-க்குள் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆகஸ்டு 2018முதல் அவ்வாறு செய்ய இயலாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும் போது ஓய்வூதியப் புத்தகம் மற்றும் நடைமுறையில் உள்ள வங்கிசேமிப்பு கணக்குஎண் (Core Banking Account)ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். மேலும் இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்குஎண்(PAN.A/c.No) குடும்ப அடையாளஅட்டை சமர்ப்பிக்காதவர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஒய்வூதிய கொடுவை ஆணை எண்ணை (PPO No) குறிப்பிட்டு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவுசெய்து இணையதள வழிசேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது “JeevanPraman” என்ற இணையதள வழியாக ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வுச் சான்றினை இணையதளம் மூலமாகவே பதிவுசெய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று “Jeevan Praman Portal”–ல் பதிவு செய்திருந்தால் வாழ்வு சான்றை இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம்.
ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியதாரர்கள் ஒய்வூதிய கொடுவை ஆணையினை தமிழ்நாடுஅரசு இ-சேவை மையத்தில் காண்பித்து தங்களது அடையாள அட்டையினை பெற்றுக் கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு இல.நிர்மல் ராஜ், இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார்.